டைரி - விமர்சனம்

By Digital Desk 5

27 Aug, 2022 | 03:32 PM
image

தயாரிப்பு : ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்

இயக்கம் : இன்னாசி பாண்டியன்

நடிகர்கள் : அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, ஷா ரா, சாம்ஸ் உள்ளிட்ட பலர்.

நடிகர் அருள்நிதி, 'டி ப்ளாக்', 'தேஜாவு' என தொடர்ந்து திரில்லர் ஜேனரிலான திரைக்கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறார். ஏன்? என்ற கேள்விக்கு அவர் தான் பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும். இருப்பினும் திரில்லர் திரைக்கதைகளில் இருக்கும் சுவாரசியம் இந்த ‘டைரி’யிலும் இருந்ததா? இல்லையா? என்பதை இனி காண்போம்.

சீனாவில் 1995 ஆம் ஆண்டில் மாயமாக மறைந்த 375 என்ற இலக்கம் உள்ள பேருந்தை மையப்படுத்தி, ஏராளமான கதைகள் உருவாகி இருக்கிறது, தமிழில் முதன்முதலாக ‘டைரி’ எனும் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காவல் அதிகாரிக்கான பணி நியமனத்திற்கு முன் பயிற்சி காலகட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குற்ற வழக்கை ஒன்றை மீண்டும் தூசு தட்டி... அவை சரியான முறையில் தான் விசாரணை நடைபெற்று இருக்கிறதா? அல்லது ஏதேனும் புதிய தடயங்கள் அல்லது குற்றவாளிகளை இனம் காண முடிகிறதா? எனும் கோணத்தில் வழக்கு ஒன்றை இவர் தெரிவு செய்கிறார். அந்த வழக்கிற்கான விசாரணையை இவர் சரியான கோணத்தில் நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், இதனை திரைக்கதையாக உருவாக்குவதிலும், கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்திற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. படத்தின் முதல் பகுதியில் கதையின் நாயகனான அருள்நிதி, சில காட்சிகளில் மட்டுமே வருவது பார்வையாளர்களுக்கு பெரும் குறையாக தோன்றுகிறது.

ஆனால் திரைக்கதை ஊட்டியிலிருந்து கோயம்புத்தூருக்கு வளைவான பாதை கொண்ட மலைப்பாதைகளில் பயணிக்கும் போது சூடு பிடிக்கிறது. குறிப்பாக பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் தெரிவு, கதைக்கு பொருத்தமானதாக இருப்பதால் ரசிக்கவும் முடிகிறது. ரசிகர்களுக்கு ஏற்படும் சுவராசியத்தின் காரணமாக, தங்கள் கைகளில் இருக்கும் செல்போன்களை கூட மறந்து திரையைக் கண்ணிமைக்காமல் பார்க்கத் தொடங்குகிறார்கள். இயக்குநர் ஒவ்வொரு முடிச்சுகளையும் எதிர்பாராத திருப்புமுனை மூலம் அவிழ்க்கும் போது, பார்வையாளர்களிடம் 'அட' போட வைக்கிறது. குறிப்பாக உச்சகட்ட காட்சியில் எதிர்பாராத திருப்பத்தை கையாண்டிருக்கும் இயக்குநரின் புத்திசாலித்தனம் ரசிகர்களை மெய்மறந்து கைதட்ட வைக்கிறது.

அருள்நிதி இதுபோன்ற திரில்லர் ஜேனரிலான திரைக்கதைகளில் அவருடைய பங்களிப்பு குறைவாக இருக்கும் என்பதாலும், தோற்றப்பொலிவு, உடல் மொழி குறித்து அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பதாலும், இது போன்ற திரைக்கதைகளை தொடர்ந்து தெரிவு செய்கிறார் என தெரிய வருகிறது. இருப்பினும் இந்த ‘டைரி’ படத்தில் அவருடைய பொலிஸ் தோற்றம், கம்பீரம், மிடுக்கு.. ரசிக்க வைக்கிறது.

கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் பவித்ரா மாரிமுத்து, பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை ரகம்.

பேருந்துகளில் திரைக்கதை பயணிக்கும் போது ஒளிப்பதிவாளரின் ரசனையான கோணங்கள், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

திரில்லர் திரைப்படங்களுக்கே உரிய பின்னணி இசையை வழங்கி, இசையமைப்பாளர் ரதன் கவனிக்க வைக்கிறார்.

‘டைரி‘ யின் முதல் சில பக்கங்கள், சுவாரசியமில்லாமல் சோர்வை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பகுதியில் ரசிகர்களை ஏமாற்றாமல், இருக்கையில் நுனிக்கு வரவழைக்கிறார் இயக்குநர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜீவன் நடித்திருக்கும் 'பாம்பாட்டம்' படத்தின்...

2022-11-28 16:57:56
news-image

'வனமே என் இனமே' காணொளிப் பாடல்...

2022-11-28 15:09:56
news-image

விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தின்...

2022-11-28 13:57:24
news-image

திருமண பந்தத்தில் இணைந்தனர் கெளதம் கார்த்திக்...

2022-11-28 15:19:02
news-image

'சல்லியர்கள்' திரைப்படத்தின் இசை வெளியீடு

2022-11-28 11:30:23
news-image

வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'...

2022-11-26 17:20:26
news-image

65 வருட இசைப்பயணம்: பழம்பெரும் பின்னணிப்...

2022-11-26 17:19:47
news-image

அனுமதியின்றி நடிகர் அமிதாப் பச்சன் பெயர்...

2022-11-26 11:54:15
news-image

படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் சூர்யா

2022-11-25 18:40:29
news-image

மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக்...

2022-11-25 18:44:44
news-image

ஸோம்பி த்ரில்லராக தயாராகும் 'எஸ்டேட்'

2022-11-25 18:45:00
news-image

'காரி' திரை விமர்சனம்

2022-11-25 18:53:57