பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 03:31 PM
image

ரொபட் அன்டனி 

  • சீனா கடன் மறுசீரமைப்பை செய்ய தயங்குகிறது - பாலித கோஹன 
  • சீனா தனது நிலைப்பாட்டை மாற்றவேண்டும் ஜனாதிபதி ரணில் 
  • 5.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையிலுள்ளனர் யுனிசெப் 

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் தமது அன்றாட பொருளாதார செயற்பாடுகளை கொண்டு நடத்துவதில் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.    

மக்களினால் தமது அன்றாட பொருளாதார செயற்பாடுகளைக் கொண்டு நடத்துவதற்கு ஏதுவான பொருளாதர நிலைமையை உருவாக்குவதற்கான தேவை நீடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கும் வகையிலான    இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை   30 ஆம் திகதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

30 ஆம் திகதி பிற்பகல் வேளையில் ஜனாதிபதி  இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்துக்கான உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.  அதனையடுத்து 31 ஆம் திகதி மற்றும் செப்டெம்பர் முதலாம் இரண்டாம் திகதிகளில்   இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாருங்கள் 


உண்மையில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நிவாரணமும் மானிய உதவிகளும் வழங்கப்படுவது மிகவும் அவசியமாக இருக்கின்றது.  

நாட்டில் கடந்த இரண்டு வருட காலமாக நீடித்து வருகின்ற இந்த டொலர் நெருக்கடி மற்றும் அதன் காரணமான பொருளாதார நெருக்கடி,  இறக்குமதி கட்டுப்பாடுகள், எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களில் அதிகரிப்பு, உணவு பொருட்களின் விலை உயர்வு   உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றன.  மக்களினால் பொருளாதார ரீதியில் மூச்சுவிட முடியாத ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியாக எவ்வாறு தான் எழுந்து நடப்பது என்பது தொடர்பான ஒரு நெருக்கடி நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். 

இந்த பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அண்மை காலமாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் கூட உடனடியாக அதிலிருந்து எழுந்து வருவது என்பது ஒரு இலகுவான தன்மையைக் கொண்டிருக்கவில்லை.  இந்த நிலையில்   பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களை அடையாளம் காணுவதற்கான வழிமுறையை மேற்கொண்டு அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும்.    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களை வழங்குவது உடனடியாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு வேலைத்திட்டமாக காணப்படுகின்றது.  அதற்கு இந்த 30 ஆம் தேதி முன்வைக்கப்பட இருக்கின்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.  அவர்களை    சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு  உதவிகளையும் மானிய வசதிகளையும் செய்து கொடுப்பதே தற்போதைய நிலையில் மிக முக்கியமானதாக இருக்கின்றது. 

இதனை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள்  துறை சார்ந்த நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றனர். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற பொருளாதார நிபுணர் கலாநிதி கணேச மூர்த்தி  அரசாங்கம்  விரைந்து   இந்த பாதிக்கப்பட்ட  மக்களை அடையாளம் கண்டு  அவர்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கவேண்டும். நாட்டில் நீடித்துக்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியால்  நடுத்தர மக்கள் தமது கொள்வனவு சக்தியை இழந்துள்ளதுடன் பாரியதொரு நெருக்கடியை சந்தித்துவருகின்றனர். எனவே அரசாங்கம் முன்வைக்கவுள்ள இடைக்கால  வரவு, செலவுத்திட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை  அடையாளம் கண்டு  அவர்களுக்கு நிவாரணங்களையும் மாணியங்களையும் வழங்கவேண்டும்    என்று குறிப்பிட்டிருந்தார்.  

அதுபோன்று மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த விடயங்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.  பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிகளும் இந்த விடயங்களை வலியுறுத்துகின்றனர். இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மக்கள் பாரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.  தற்போது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு நீண்ட கால நிதி உதவி தொடர்பான உடன்படிக்கையை செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றது.  கடந்த ஏப்ரல் மாதம் இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகிய தற்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு   விஜயம் செய்திருப்பதுடன்  பேச்சுக்கள்  தொடர்கின்றது. இம்முறை  உத்தியோகஸ்தர் மட்டத்திலான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கான   பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.  அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து டிசம்பர் மாதம் அளவில் இலங்கைக்கு சர்வதேச நாணயத்தின் உதவி கிடைக்க ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

தாமதிக்கும் கடன் மறுசீமைப்பு 

ஆனால் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு  உதவுவதற்கு இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை  மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.  அதன்படி இலங்கைக்கு   கடன் வழங்கியிருக்கின்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பாரிஸ் கிளப் எனப்படும் நாடுகள் மற்றும் இருதரப்பு கடன்களை வழங்கியுள்ள   நாடுகள் ஆகியவற்றுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு  தொடர்பான பேச்சுவார்த்தைகளை  நடத்த வேண்டி இருக்கின்றது. 

இதில் ஒரு சிக்கல் நிலைமை காணப்படுகின்றது.  காரணம் இந்த கடன் மறுசீரமைப்பை  செய்து கொள்ளும் செயற்பாட்டில் சீனா தயக்கம் காட்டி வருகின்றது.  காரணம் இவ்வாறு கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளும் கொள்கையை சீனா கடைப்பிடிப்பதில்லை.   எனினும்  இலங்கை பெற்று இருக்கின்ற வெளிநாட்டு கடன்களில் சீனாவிடம் பெற்ற கடன்கள்    10 சதவீதமாகும்.    எனவே சீனாவுடனும் இலங்கையை கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.  ஆனால் அதற்கு சீனா தயக்கம் காட்டி வருகின்றது. இந்நிலையில் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் நீடிக்கிறது. 

சீனாவிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி 

இது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் மறுசீரமைப்பு  விவகாரத்தில் சீனா அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும், இலங்கை நிலைமையை புரிந்துகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கடன் மறுசீரமைப்பை  செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தை மிக திட்டவட்டமான முறையில் வெளியிட்டிருந்தார். 

அதனடிப்படையில் இலங்கை சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.  அந்த முயற்சிகள் வெற்றி பெறும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.  எனவே இந்த மறுசீரமைப்பு செயல்பாடுகள் விரைவாக  முன்னெடுக்கப்பட வேண்டும். 

சீன தூதுவரின் மதிப்பீடு 

 இந்த விவகாரம் குறித்து   அண்மையின் கருத்து வெளியிட்டிருந்த சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கோகன சீனா கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது தொடர்பான ஒரு தயக்கத்தை வெளிக்காட்டி வருகின்றது.  காரணம் உலக நாடுகள் முன்னெடுக்கும் அந்த நடைமுறையை சீனா முன்னெடுப்பதில்லை.  அதனை சீனா விரும்புவதில்லை.  எனினும் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.

 எப்படியிருப்பினும் தற்போதைய நிலையிலிருந்து மீண்டு வருவதற்கும் தற்போதைய  இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கும் சர்வதேச சர்வதேச நாணய நிதியத்தின்  உதவி இன்றியமையாதது என்ற ஒரு நிலைப்பாடு பொதுவாக முன்வைக்கப்படுகின்றது.  இந்நிலையில் அதற்கு இலங்கை அரசாங்கம்   கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது அவசியமாகின்றது.  

மாற்றுக் கருக்கள் 

இதேவேளை  சர்வதேச நாணய நிதியம் என்பது இலங்கைக்கான ஒரே மாற்றுத் தெரிவாக இருக்கக்கூடாது  என்பதை அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்    கலாநிதி அகிலன் கதிர்காமர்  தெரிவித்திருந்தார்.  காரணம் இதற்கு முன்னர் இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணயத்தை  நாடி நீண்ட கால கடன்திட்டங்களை மேற்கொண்டு கடன் உதவிகளை பெற்று இருக்கின்றது. இதனூடாக இலங்கை பாரியளவு கடன் சுமையை எதிர்கொண்டிருக்கின்றது.  இன்று அந்த கடனை செலுத்த முடியாது நிலையில் இருக்கின்றது. மாறாக எந்த விதமான பொருளாதார முன்னேற்றமும் நாட்டுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. எனவே சர்வதேச நாணய இதயத்தை நாடுவதை ஒரே தெரிவாக இலங்கை கொண்டிருப்பதற்கு பதிலாக இலங்கை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். 

இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.  உண்மையில் இதற்கு முன்னர் இலங்கை 16 சர்வதேச நாணய நிதியத்தை நாடி இருக்கின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் அந்த பொருளாதார மறுசீரமைப்பு  நடவடிக்கைகளையும் இலங்கை  கடந்த காலங்களில் முன்னெடுத்தனவா?  என்பது தொடர்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

எப்படியிருப்பினும் அரசாங்கம் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு தற்போது நடவடிக்கை எடுப்பதுடன் நீண்ட கால ரீதியில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான  நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும்  அதனூடான விளைவுகள் குறித்து வந்துகொண்டிருக்கும்  புள்ளிவிபரங்கள் அபாயகரமாகவுள்ளன.  

மனிதாபிதான தேவையுடன் 5,7 மில்லியன் மக்கள்  

அண்மையில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள  யுனிசெப் அமைப்பு  உலகளாவிய ரீதியில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குகிறது  .    நாடளாவிய ரீதியில் சுமார் 2.3 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 5.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. 

எனவே டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர குறுகியகால நீண்டகால திட்டங்களை முன்னெடுக்கின்ற அதேவேளை தற்போது பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு நிவாரணமும் மானியமும் வழங்கப்பட வேண்டியது  அவசியமாகும்.    பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து  இவ்வாறான உதவிகள்  வழங்கப்படுவது மிக அவசியமாகவுள்ளது.   குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், அன்றாடம் தொழில் செய்து தமது வருமானத்தை பெற்றுக் கொள்கின்றவர்கள், அன்றாடம்  தமது பொருளாதாரத்தை கொண்டு நடத்துகின்றவர்கள்,  சுயதொழில் முயற்சியாளர்கள்,  சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள்,   மாத சம்பளத்திற்கு பணிபுரிகின்ற   ஊழியர்கள் உள்ளிட்ட இந்த மக்களை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் மானிய வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.  இது குறித்து பல்வேறு தரப்பினர் முன்வைக்கின்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுவது அவசியமாகும். இடைக்கால பட்ஜட் குறித்து மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07