8 வருடங்களின் பின் மீண்டும் பலம் வாய்ந்த அணியாக இலங்கை மீண்டெழுந்து ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுமா ?

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 03:15 PM
image

மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுக்க 38 வருட வரலாற்றை கொண்ட ஆசிய கிண்ணம் இன்று (27) திகதி சனிக்கிழமை அன்று டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே தகுதிகாண் போட்டிகள் நடந்து முடிந்த தருவாயில் பிரதான அணிகளாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், பங்களாதேஸ், ஆகிய நாடுகளுடன் தகுதி அணியான ஹெங்கெங்கும் பங்குபற்றும்.

மொத்தம் 6 அணிகள் பங்குகொள்ள உள்ளன. இந்த கிண்ணத்தில் முதல் தொடர் டுபாயில் 1984 ஆண்டு நடைபெற்றது. குறிப்பிடத்தக்க விடயமாகும். முதல் தொடரில் இந்தியா, இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

முதல் 50 ஒவர் கொண்ட போட்டியான நடாத்தப்படுகின்ற இத் தொடர் 2016 ஆண்டு இருபதுக்கு - 20 தொடாராக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தொடர் நம் நாட்டு ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான தொடர் ஆகும். ஏன் என்றால் பொருளாதார சிக்கலினால் நாடு மோசனமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஆர்பாட்டமும் எரிபொருளுக்கான வரிசை, அத்தியாவசிய பொருட்களையும் வாங்க வரிசையாக நின்ற மக்கள் அரசியல்வாதிகள் மேல் தங்களது கோபதாபத்தை வெளிப்படுத்தினாலும் நமது கிரிக்கெட்டை அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை.

நாடு இக்கட்டான நிலையில் இருந்த போதும் நடந்து முடியந்த தொடர்களை பார்த்த போது தெரியும் இந்த மக்கள் ஆர்வத்துடன் போட்டிகளை ரசித்தார்கள். எமது நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கூறும் அமுதமொழி; “எவ்வளவு தோல்வியுற்றாலும் நம் தேசத்துக்கு எங்களின் ஆதரவை தருவோம்.” 

நாட்டு பற்றுடன் கூறினார்கள் அதையும் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்த தருணங்களை எங்கள் கண்களால் வியத்த வண்ணம் பார்வையிட்டோம். 

கடந்த அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் தொடரின் போது தங்கள் எதிர் அணி நம் சேத்துக்கு வந்து விளையாடிய போதும் எந்தவொரு இடையூறுகளும் செய்யாமல் அவர்களை இங்கு வந்து விளையாட சந்தர்ப்பம் அளித்ததோடு அவர்களுக்கு நன்றி பராட்டினார்கள். 

அவுஸ்திரேலியா வீரர் கிலேன் மெகஸ்வெல் 5 வது ஒருநாள் போட்டி முடிவின் போது “இப்படி பட்ட ரசிகர் பட்டாளத்தை நாம் பார்த்ததில்லை என்னையும் என் அணியையும் நெகிழ வைத்த தருணம் ஆகும்.

அதே அணியில் ஒருநாள் தலைவர் பின்ச் நம் சகோதர மொழி சிங்களத்தில் “ஸ்துதி ஸ்ரீலங்கா” என்று கூறிய நிகழ்வு எல்லாம் ஒருபோதும் மறக்க முடியாது. 

சர்வேத ஊடகங்கள் சமூக ஊடகங்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள்,  கிரிக்கெட் வர்ணையாளர்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்ட ஒரு தருணம் இது ஆகும்.

அதுமட்டுமல்லாமல் இந்த தொடர் முதல் இலங்கையில்தான் நடக்கயிருந்தது. நாட்டில் இருந்த அசாதார சூழ்நிலையில் காரணமாவே டுபாயிக்கு மாற்றப்பட்டது. 

இது பற்றிய பல விமர்சனங்கள் இலங்கை பராளமன்றத்திலும் ஊடங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களலும் கேள்விகள் எழுப்பபட்டது. 

எது எப்படி இருக்க எங்கு விளையாடினாலும் நன்றான முறையில் விளையாடி தொடரை கைப்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு தாய் நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் அவா….

இந்த ஆசிய கிண்ணம் வரலாற்றின் போது இலங்கை அணியின் பெருபேறுகள் மிகவும் உச்ச நிலையிலேயே காணப்படுகின்றது. நடந்து முடிந்த 14 தொடர்களில் 11 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து 5 முறை கிண்ணத்தை கைப்பற்றி இருக்கின்றோம் . 

1986, 1997, 2004, 2008 கடைசியான 2014 ஆண்டு கைப்பற்றியுள்ளோம். இந்த 5 வெற்றிகளுமே மறக்க முடியாது. ஆனால் 2008 ஆண்டு பெற்ற வெற்றியை எந்தவொரு ரசிகனுமே மறக்கமாட்டார்கள்.

முதலில் துடுபாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அணி 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த தருணத்தின் போது போட்டி இந்தியா பக்கம் போனது இந்த போட்டியை தொலைகாட்சி வாயிலாக பார்த்த ரசிகர்களுக்கு தெரியும். 

மாஸ்டர் பிளாஸ்டர் சனத் ஜயசூரியவின் 125 ஓட்டங்களும் டில்ஷான், சமிந்த வாஸ், குலசேகரவின் ஓட்டங்களுடன் 273 ஓட்டங்களை பெற்றது.

எதிர்த்து துடுப்பாடிய பலம் பொருந்திய இந்திய அணிக்கு புதிய வீரராக களமிறக்கபட்டவர் தான் அன்றைய போட்டியின் நாயகன் அவரே அஜந்த மெண்டிஸ்.

அவரின் 6 விக்கெட்டுக்கள் போட்டியை இலங்கையின் பக்கத்திற்கு திருப்பி மஹேலவின் தலைமையில் 2008 ஆண்டு கிண்ணத்தை கைப்பற்றினோம். 

அதுமட்டுமல்லாமல் நடந்து முடிவுற்ற ஆசிய கிண்ண தொடர்களின் போது இதுவரை அதிக ஓட்டங்களை குவித்த வீர்ர் சனத் ஜயசூரிய 25 (1990-2008) போட்டிகளின் பங்குபற்றி 1220 ஓட்டங்களும் அது போல கூடுதலான விக்கெட்டுக்கள் பெற்ற வீரர் நமது யோக்கர் மன்னன் மலிங்க 15 (2004-2018) போட்டிகளில் பங்குபற்றி 33 விக்கெட்டுகளை பெற்றுள்ளமே பெறுமைக்கூறிய விடயமாகும். 

அது மட்டுமல்லாமல் 2014 ஆண்டுல் முதல் சுற்றில் இருந்து பங்குபற்றி அனைத்து போட்டிகளை வெற்றி பெற்று இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அன்ஜலோ மதிவ்ஸின் தலைமையில் கிண்ணத்தை கைப்பற்றியமை பெருமைக்குரிய விடயேமே. 

இப்படி எல்லாம் போட்டிகளை வெற்றிவாகை சூடிய சங்கா, மஹேல, டில்ஷான் ஜாம்பாவான்களின் ஓய்வை பின்னர் இலங்கை அணி விளையாடி தொடர்களின் பெரிதாக சோபிக்க முடியவில்லை. 

2016 ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரின் போது ஒரு போட்டியில் வெற்றியையும் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேது அதுபோல 2018 தொடரின் போது யாரை தலைவரை நியமிப்பது என்றே தெரியாமல் இருந்த இலங்கை அணிக்கு அன்ஜலோ மதிவ்ஸ் தலைமை பொறுப்பை ஏற்க வைத்து டுபாய்க்கு அனுப்பு வைத்த கிரிக்கெட் வாரியத்திற்கும் இலங்கை வாழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்ததது. 

கத்துகுட்டி ஆப்கானித்தானிடம் கூட தோல்வியை தழுவி மற்றும் பங்காதேஷிடம் தோல்வியுற்று முதல் சுற்றிலே தொடரில்இருந்து விலகியது. 

இந்த தருணம் முழு இலங்கைக்கு ஏமாற்றமே அளித்தது. இப்படிபட்ட வரலாற்று சரித்திருடத்துடன் இம்முறை தசுனின் தலைமையில் இளம் அணி போட்டிகளுக்கு சந்திக்க போகின்றது.

கடந்த 2016 பின்னர் இலங்கை அணி சரிந்து போன இலங்கை மீட்டெடுக்க வந்த பல பயிற்சி விப்பாளர்களே ஏராளம். 

புல பயிற்சிவிப்பாளர்களை பயன்படுத்தி பார்த்த போதிலும் அந்த முயற்சி சரிபோன வில்லை. ஒரு தொலைக்காட்சி நேர்கானலில் முரளிதரன் கூறி இருப்பார் “இலங்கை கிரிக்கெட் மீட்டு எடுக்கவே முடியாது” என்ற வார்த்தை எல்லாம் கேட்க வேண்டுடிய தருணங்களுக்கு நாம் ஆள் ஆகினோம். 

யாருக்கு தலைமை பொறுப்பை கொடுப்பது, சில சந்தர்பங்களில் ஒரு போட்டிக்கு ஒரு தலைவர் என அப்படி எல்லாம் அடிப்பட்டு ரூபவ் ஏராளமான விமர்சனங்கள்ரூபவ் மோசடிகள் ஒரு கட்டத்தில் அய்யோ இலங்கை போட்டியா இன்றும் தோல்விதான் குறிவிட்டு தொலைகாட்சி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பமும் இருந்தது.

ஆனாலும் தோல்விகளை பார்த்து பார்த்து ஒரு போட்டியாவது வெற்றி பெறும் தருவாயில் சமூக ஊடகங்களில் போடும் பதிவுகளை பார்க்கும் போது இன்னும் இந்த கிரிக்கெட்டை நேசித்த வண்ணம்தான் ரசிகர்கள் இருக்கிறார்களா என்று கூட நினைக்க கூடும். 

உண்மையாகவே யாருமே தோல்விகளை பார்க்க விரும்ப மாட்டார்கள். ஆனால் 2016 முதல் 2019 ஒக்டோபர் வரை இலங்கை கிரிக்கெட்டு ஒரு கடுமையான காலம் ஒரு சில தொடர்கள் வெற்றி பெற்றி இருந்தாலும் கூட சரியான அணி தேர்வு இருக்கவில்லை கட்டடைப்பு இருக்க வில்லை.

இந்த தருணத்தில் தான் சந்தித்த விமர்சணங்களை எல்லாம் முற்றிபுள்ளி வைக்கதான் தென்னாபிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆத்தர் தலைமை பயிற்சியாளாராக பொறுப்பேற்றார். 

இவர் பொறுப்பேற்றுக்கும் போதும் இவரும் இதற்து முதல் இருந்த பயிற்றுவிப்பாளர் போல் இருப்பார் , கொடுக்கும் சம்பளம் அநியாயம் என்று எல்லாம் விமர்சணங்கள் வந்தது. 

இவரின் பயிற்றுவிப்பு கீழும் இங்கிலாந்து மோசமான முறையிலும் முதல் முறையாக ஒரு பங்காதேஷிடம் ஒருநாள் தொடர் ஒன்றும் தாரை வார்த்தோம்.

ஆனால் அதற்கு பிறகு நம் அணிக்கும் சரியான தேர்வுகளும் , இளம் வீரர்களுக்கு வாய்ப்பகள் கிடைத்ததது திமுத்கும் டெஸ்ட் மற்றும் தசுனுக்கும் ஒருநாள் மற்றும் 20 20 போட்டிகளுக்கும் தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டது. 

மிக்கியை போட்டிகளின் போது பார்த்தால் ஒரு கோப சுவாவத்துடகே எப்பொழும் இருப்பார். திடீர் என்றும் வீரர்கிடையே வாக்குவாதம் ரூபவ் போட்டியின் போது அங்கும் இங்குமாக சென்று கொண்டிருப்பார்.. போட்டியின் பேறுபேறுகள் இல்லாவிடினும் இந்த இளம் பட்டாளம் என்றாவது ஒழுநாள் மீண்டெழும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஒரு நபர் தான் மிக்கி.

அந்த நம்பிக்கை வீண் போக வில்லை. அவர் தனது பயிற்றுவிப்பாளர் பதவியை ஆரம்பித்தது 2019 மேற்கிந்தி அணியின் ஒருநாள் தொடரில் இருந்து 2021 ஆண்டு நடைபெற்ற மேற்கிந்த தீவினுடனான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடிந்து கொண்டார். 

அவரின் பிரியாவிடை போது கேக் வெட்டி மகிழ்வோடு எங்களுக்கு மீண்டும் இந்த கிரிக்கெட் மீட்டு கொடுத்த விட்டிர்கள் என்று நன்றி கூறி அனுப்பி வைத்தார்கள் இலங்கை ரகிகர்கள்.

கடந்த வருடம் நடந்த இருபதுகிருபது தொடரையும் ரசிகர்கள் நினைத்ததை விட எதிர் அணிக்கு முடிந்தவரை சவாலாக இருந்து போட்டிகளில் ஈடுபடுத்தி கொண்டனர். 

இதை முன்னால் இங்கிலாந்து அணி தலைவர் ரூடவ்யக் மொகன் “எங்களுக்கு சுபர் 12 சுற்றில் சவாலாக விளையாடிய ஓரே அணி இலங்கை ” குறிப்பிட்டு இருந்தார். 

அந்த தொடரின் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஈர்ப்பை இலங்கை பெற்றுக்கொண்டது என்பது எந்த மாற்றுகருத்தும் இல்லை. 

அதற்கு பின் சிம்பாபேவுடான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றியது. அவுஸ்திடேலியா மண்ணில் தங்களுது முழு திறமையையும் வெளிப்படுத்தி 5 போட்டிகளிலும் ஒரிரு போட்டிகளில் தடுமாறியாலும் அந்த தொடரில் ஒரு போட்டியை வெற்றி கொண்டது இந்த இளம் படை. 

ஆனால் மீண்டும் இந்தியாவில் முழுமையாக டெஸ்ட் மற்றும் இருபதுகிருபது தொடரையும் இழந்து ரசிகர்களை சோக உலகிற்கு கொண்டு சென்றது. 

ஆனால் அந்த தொடரில் போது தசுன்ரூபவ் திமுத்தின் துடுப்பாட்டம் முக்கியமாக பேசபட்ட விடயங்கள். தொடர் தோல்விகள் பெற்றாலும் தோல்விகளினால் பெறும் அனுபவமே நமக்கு வேண்டும் என்ற தூர நோக்கத்தில் பயணித்து அவுஸ்திடெலியாவுக்கு தொடரை கைப்பற்றி முழு தேசத்துக்கு பெறுமை சேர்த்து கொடுத்தது இந்த இளம் படையினர்.

இந்த ஒட்டுமொத்த அனுபவத்துடனுமே இப்போழுது இதே இளம் அணியினர் தான் ஆசிய கிண்ணத்தில் முதல் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணியை எதிர்த்து விளையாட போகின்றார்கள் தசுனின் தலைமையிலும் உப தலைவர் அசலங்காவுடன் இம்முறை குழாம் அறிவிக்கப்பட்டது. 

பங்குபற்றும் அனைத்து நாடுகளும் தங்களது குழாமை தொடருக்கு 1 வாரத்திற்கு முன் அறிவித்து இருந்தாலும் இலங்கை குழாம் சற்று தாமதமாகவே விளையாட்டுத்துறை அமைச்சரினால் அறிவிக்கபட்டது. 

முழுமையான ஒரு இளம் அணிதான் இம்முறை தேர்வு செய்யபட்டுள்ளது. தசுன் சானக்க, சரித் அசலங்கா,பெதும் நிசங்கா , குசல் மெண்டிஸ்,பானுகா ராஜபக்ஷ, அசேன் பண்டார, தனுஸ்க குனதிலக, தனஞ்சய சில்வா, வனிந்து அசுரங்கா, சாமிக கருநாரத்த, அசித பெர்ணடோ, பிரபோத் மதுஸான். மகேஸ் திக்ஷன, ஜெப்ரி வெண்டஷே, பிரவீன் ஜயவிக்ரம, மதீஷ பதிரண,டிஸ்ஷான் மதுசங்க இந்த குழாத்தில் சற்று உள்நோக்கினால் முழுக்க முழுக்க இளம் படையினர்.

ஆனால் இந்த இளம் படை பூரண அனுபவத்துடனும் இம்முறை போட்டிகளை எதிர்கொள்ளுவார்கள் என எவ்வித ஐய்யமும் இல்லை. 

இந்த குழாமில் இடம்பெற்ற 5 பேர் நடந்து முடிந்த ஐபில் போட்டிகளிலும் அனுபவத்தை பெற்றுள்ள வீரர்கள், அதுமட்டுமல்லாமல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நடாத்தப்பட்ட 4 அணிகளை கொண்ட தொடரின் மூலம் சிறந்த வீரர்களே தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழாம் ஆகும்.

இந்த குழாத்தின் துடுப்பாட்ட வீரர்களை பார்க்கும் போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பேதும் நிசங்க கடந்த காலங்களில் 3 வகை போட்டிகளிலும் நிதாமான முறையில் துடுப்படுத்த கூடியவர். 

கடந்த வருடம் இருபதுக்கிருபது உலககிண்ண தொடரின் போது மிகவும் சிறப்பாக முறையில் துடுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

இவருடன் ஆரம்ப ஜோடிகளாக களமிறங்க காத்திருக்கும் தனுஸ்க குனதிலக்க கடந்த காலங்களில் விமர்சனங்கனை உட்பட்ட ஒரு வீரர். 

அதன் பிறகு நடைபெற்ற லங்கா பிரியல் லீங் போட்டியின் போதும் சிறப்பான முறையில் தன்னுடைய இடத்தை மீண்டும் நிலைக்க ஆரம்பித்தார். 

இவருடைய அட்டகாசமான களத்தடுப்பு போட்டிகளின் போது கவனீத்தீர்பீர்கள். அதுமட்டுமல்லாமால் பந்து வீச்சு பாணியிலும் தனது முழுமையான பங்களிப்பு அளிக்கவேண்டும்.

குணதிலக்க போன்று சிறிய காலம் போட்டிகளுக்கு தடைவிதிக்கபட்ட வீரர் குசல் மெண்டிஸ் . நடந்து முடிந்த தொடர்களில் தன்னுடைய இடத்தை நிலைநிருத்தி கொண்டார். குசல் மெண்டிஸின் அணிதான் இலங்கை கிரிக்கெட் சபை நடாத்திய தொடரை கைப்பற்றியது குறிப்பிட தக்கது. அதுமட்டுமல்லாமல் தொடரின் சிறந்த நாயகனும் இவரே. 

இது எல்லாம் வைத்து பார்க்கும் குசலினின் கிரிக்கெட் வாழ்க்கைளின் பிரகாமான காலம் தொடருமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

அதுபோல உப தலைவர் அசலங்கவா அணி தடுமாறிய தருணத்திலும் பல போட்டிகளில் தனது அனுபவத்தின் போது இன்னிக்சை கட்டி எழும்பும் திறமை கொண்டவர். கடந்த வருடம் டுபாயில் அதிகூடிய ஒட்டங்களை விளாசி தள்ளிய வீரர். 

எனவே இம்முறையும் அதே உத்வேகத்துடன் இருப்பார் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த இளைஞர் படையை வழிநடத்தி கொண்டு செல்லும் தசுனின் பங்களிப்பு மிகவும் வரவேற்க வேண்டிய விடயம்.

தோல்வியினால் கிரிக்கெட் விட்டு தள்ளி இருந்த ரசிகர்கள் மீண்டும் பார்க்க வைத்து எங்களுக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருங்கள் என எப்பொழுதும் வழியுறுத்தி கொண்டு இருப்பார். 

கடைசியாக நடந்த அவுஸ்ரெலியா தொடரின் கடைசி 18 பந்துகளை சிறப்பான முறையில் துடுபடுத்தாடி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறிய தருணங்கள் இலங்கை கிரக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கும். 

இளம் வீரர்களை ஒற்றுமையான முறையில் ஒன்று சேர்த்து கொண்டும் விளையாடியது. இந்த தலைமைத்துவம் கிரிக்கெட் ரசிகர்களிடம் வரவேற்றுபட்டு கொண்டு இருக்கின்றது.

அத்துடன் சகலதுரை ஆட்டகாரர் தனஞ்சய டி சில்லா இந்த குழாமில் உள்ள அனுபவம் மிக்க வீர்ர் ஒருவர். 

எந்த வேலையிலும் அணிக்காக விக்கெட்டுகளை எடுத்து கொடுப்பார் அதுமட்டுமல்லாமல் களத்தடுப்பில் சிறந்து விளங்குவார்.

அடுத்த படியாக சாமிக கருணாரட்ன மிகவும் வித்தியாசமான வீரர். வெற்றிக்காக மட்டும் உழைக்கும் வீரர். இவர் போல வீரர்கள் நம் தேசத்து கிரிக்கெட்டுக்கு தேவை. துடுப்பாட்டம், பந்து வீச்சு , களத்தடுப்பு என்று எல்லா பாணியில் திறமைகளை வெளிக்காட்டி தன்னுடைய அணிக்கு வெற்றி கொடுத்து விட வேண்டும் என ஒரு மனோபிலாஸத்தை கொண்ட வீரர்.

இத்துடன் அனுபவ வீரர் ஹசரங்கா நம் அணியின் துரும்பு சீட்டு என்றுதான் கூற வேண்டும். கடந்த வருடம் நடைபெற்ற உலகிண்ண போட்டியின் போது 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை சேர்ந்து கொண்டார். 

அதுமட்டுமல்லாமல் ஐபிலிலும் முழுமையான பங்களிப்பை அளித்து 27 விக்கெட்களை சரித்தமை பெருமைக்குரிய விடயமாகும். இவரின் பந்து வீச்சு இலங்கை அணிக்கு பக்க பலமே. டுபாயில் டீ10 தொடரிலும் கலக்கிய ஹசுரங்கா மீண்டும் டுபாயில் முழு பங்களிப்பை வழங்குவார் என நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள் ரசிகர்கள்.

தொடரின் பலவீனமாக பேசப்படுகின்ற விடயம்தான் பக்க பலமான திகழ்வார் என நினைத்த சமிர துரதிஸ்ட வசமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். 

அண்மைகாலாமாக சரியான நேரத்தில் விக்கெட்களை எடுத்து போட்டியின் தன்மையை மாற்றகூடிய ஒரு வீரர் . 

அதுமட்டுல்லாமல் ஒரு நல்ல சராசரி துள்ளியமான பந்துவீச்சு பாணியை இந்த தொடரில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

அதுபோக சமீபத்தில் நடந்த எல்லா ஆசிய கிண்ணத்திலும் பங்குபற்றி நல்ல துடுப்பாட்ட சராசரி கொண்ட ஒரு வீரர் தான் அன்ஜலோ மதிவ்ஸ். 

இவருக்கு அண்மை காலமாக 20 20 போட்டிகளுக்கு தெரிவுசெய்வதை தவிரத்து வருகின்றது இலங்கை கிரிக்கெட். ஆனால் சமீபத்தில் மெதிவ்ஸ் கூறிய விடயம் “தான் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்து கொண்டு உள்ளேன்” இனிவரும் காலங்களில் அனுபவ வீரர்களை இப்படியான முக்கியமான தொடர்களுக்கு உட்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இவ் ஒட்டுமொத்த ஏற்றதாழ்வுகளுடன் இம்முறை போட்டிகளுக்கு முகம்கொடுக்க போகிறார்கள் நம்மவர்கள். 

மஹேஸ் தீக்சனா,பானுக ராஜபக்ச போன்ற அனுபவ வீரர்களும் மற்றும் அணியின் அனைத்து வீரர்களும் முழு அணியாக ஒற்றுமையாகவும் திட்டங்களை வகுத்து விளையாட வேண்டும். 

எல்லா வீரர்களும் தம் தமது பொறுப்புக்களை சரிவர செய்தால் கிண்ணத்தை வெற்றி பெறலாம். இதற்கும் முன்பும் டுபாய் ஆடுகளங்களில் போட்டிகளில் பங்குபற்றிய உள்ள அனுபவங்களும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தலைமை பயிற்று விப்பாளர் கிரிஸ் சில்வவூற் மற்றும் உதவி பயிற்று விப்பாளர் நவீட் நவாஸ் இவர்கள் இருவரின் ஆலோசனைகளும் , திட்டங்களும் வழிவகுத்து கொடுத்து இலங்கை அணிக்கு வெற்றிப்பாதைக்கு கொண்டு வருவார்கள் என காத்திரிக்கிறார்கள் ரசிகர்கள்.

அதுமட்டுமல்லாமல் இவ் கிண்ணத்தை இதற்கு முன்பும் 5 தடவை வெற்றியை கொண்டாடிய தருணங்கள் இருக்கின்றன ஆனால் இம்முறை நாங்கள் எல்லோரும் ஒரு இன்னலான வாழக்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டுக்காக பெருமை சேர்க்க டுபாய் சென்றுள்ள நம் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தொடரில் வெற்றிவாகை சூடி எங்களை ஆனந்த உலகிற்கு எடுத்து செல்லுங்கள்.

“நம் நாட்டு கிரிக்கெட் மீது உள்ள அன்பும், ஆதரவும் என்றும் நிலைத்திருக்கட்டும்.”

விஸ்வநாதன் அபிவிதுஷன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்ணுக்கு புலனாகாதவற்றை வெளிப்படுத்துதல் – காஸாவின்...

2024-03-02 12:23:33
news-image

துறக்காத துறவிகள் பயிர்களை மேயும் பேராபத்து

2024-03-01 20:47:19
news-image

சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள...

2024-03-01 17:27:58
news-image

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார...

2024-03-01 16:20:49
news-image

எதிர்மறையான சமாதானத்தில் இருந்து நேர்மறையான சமாதானத்துக்கு...

2024-03-01 15:04:45
news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48