நான் மக்கள் சார்பானவன் : அரசியலில் சுயாதீனமாகவே செயற்படுவேன் - ரஞ்சன் ராமநாயக்க

Published By: Vishnu

26 Aug, 2022 | 08:03 PM
image

(எம்.மனோசித்ரா)

மரணிப்பதற்கு முன்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன். எனவே எனக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன்.

நான் மக்கள் சார்பானவன் என்பதால் அரசியலில் சுயாதீனமாகவே செயற்படுவேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

பொது மன்னிப்பின் கீழ் இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலையான அவர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

கிடைத்துள்ள விடுதலைக்கு நன்றி கூறுகின்றேன். மக்களுக்காகவே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். நான் மரணிப்பதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்து மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கமைய எனக்கு விடுதலை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு ஊழல் - மோசடிக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன் என்று நான் அவருக்கு வாக்குறுதியொன்றை வழங்கியுள்ளேன். எவ்வாறிருப்பினும் ஊழல்வாதிகள் பிடிப்பதை சிலர் விரும்பமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்.

எனக்கு விடுதலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் , சட்டமா அதிபர், ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று எனக்காகக் குரல் கொடுத்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி செயலாளர் , சிறைச்சாலை ஆணையாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் சுயாதீனமாகவே செயற்படுவேன். நான் மக்கள் சார்பானவன். மக்களின் கோரிக்கைக்கு அமையவே செயற்படுவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19
news-image

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...

2024-05-29 09:19:38
news-image

இன்றைய வானிலை

2024-05-29 06:14:11
news-image

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடும்...

2024-05-29 05:45:55
news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28