(எம்.வை.எம்.சியாம்)
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதை விடுத்து சர்வகட்சி அரசாங்கம் எனும் போர்வையில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்து அதன் ஊடாக அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சு பதவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதில்லை. அதற்கமைவாக அமைச்சரவை எண்ணிக்கை 15 அல்லது 20 வரையில் மட்டுப்படுத்தப்பட வேண்டும்
இந்நிலையில், எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளது, எரிவாயு வரிசைகள் நீக்கப்பட்டுள்ளது அல்லது வாழ்க்கை செலவு ஓரளவு குறைந்துள்ளது இதன் காரணமாக அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கவில்லை.
நாட்டில் நிலவும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் குறுகிய கால பகுதிகளுக்குள் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை மட்டுப்படுத்தி குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை மேலும் மேலும் பிற்போடப்பட்ட வேண்டிய தேவையில்லை.
இந்நிலையில் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி விட்டு அவர்களை குதூகலப்படுத்தும் செயற்பாடு மாத்திரமே தற்பொது இடம் பெறுகின்றது. நாட்டில் கடந்த 30 வருடங்களாக பல அரசாங்கங்கள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் அதில் குறிப்பாக சிலர் பல தடவைகள் தொடர்ச்சியாக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் அங்கம் வகித்துள்ளதோடு அவர்கள் இன்னமும் அதே அமைச்சுப்பொறுப்புக்களில் அமர்ந்து இருக்கிறார்கள்
அரச பதவிகளில் கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் நன்கு அனுபவித்து மேலும் எதிர்காலங்களில் அரச வாகனங்கள், அரசினால் வழங்கப்படுகின்ற விசேட எரிபொருள் சலுகைகள், அரச வீடுகள் என்பவற்றை பெற்று சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM