வாழைச்சேனை நிருபர்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரியில் 25 ஆம் திகதி இரவு ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற்று இறுதி நாளாகிய 25 ஆம் திகதி இரவு தேவதிகளிளை மந்திரித்து கட்டுதல் தொடர்பான முரன்பாட்டின் காரணமாக இரு குழுக்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM