விமல் தலைமையிலான கூட்டணி எமக்கு ஒரு சவால் அல்ல - ரோஹித அபேகுவணவர்தன

Published By: Vishnu

26 Aug, 2022 | 08:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் தான் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறித்து கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டணி எமக்கு ஒரு சவால் அல்ல என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுவணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டதாக ஒருசிலர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன வசமே உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக மாத்திரமே பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்கள் தான் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினரானார்.

பேராசிரியர் ஜி.எல் பிரிஸிற்கு பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் உயர் பதவியையும், அரசாங்கத்தில் முக்கிய அமைச்சினையும் வழங்கியது. இருப்பினும் அவர் தற்போது கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறார்.ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சினை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்திய விமல் வீரமவன்ச உள்ளிட்ட தரப்பினர் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக பரந்துப்பட்ட கூட்டணியை அமைப்பதாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டணி ஒன்றும் பொதுஜன பெரமுனவிற்கு சவால் அல்ல, பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் மறுசீரமைக்கப்படும். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எத்தேர்தல்களிலும் பொதுஜன பெரமுன ஊடாகவே போட்டியிடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43