நல்லூர் தீர்த்தோற்சவம்

Published By: Vishnu

26 Aug, 2022 | 01:55 PM
image

வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று காலை இடம்பெற்றது.

26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும்,வெள்ளி எருது வாகனத்தில் சடேஸ்வரரும் வெளிமயில் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் வள்ளி,தெய்வயானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் தீர்த்தோற்சவ உற்சவத்தினை கண்டுகளித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இருபத்தைந்து நாள் கொண்ட மகோற்சவத்தில் இன்று மாலை கொடியிறக்கமும், நாளை பூங்காவனமும் நடைபெற்று 28 ஆம் திகதி  வைரவர் உற்சவத்துடனும் மகோற்சவ பெருவிழா நிறைவு பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31