‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

26 Aug, 2022 | 08:36 PM
image

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் . சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எனும் பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த கோப்ரா திரைப்படம் ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று வெளியாகிறது. 

 ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் பங்குபற்றினர். 

சீயான் விக்ரம் பேசுகையில், '' இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். ‘கோப்ரா’ படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. 

நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம். எம்முடைய நடிப்பில் தயாரான திரைப்படங்கள் பட மாளிகையில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது.” என்றார். 

 

‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டத்தில் சீயான் வீக்ரம் இருபதிற்கும் மேற்பட்ட வித்தியாசமான ஒப்பனைகளில் வருகிறார். எக்சன் காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

கோப்ரா படத்தின் முன்னோட்டம், தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதால் இந்த படம் வசூல் ரீதியாக பாரிய சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right