நடிகர் செல்வராகவனின் 'பகாசூரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 5

26 Aug, 2022 | 08:35 PM
image

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'ருத்ர தாண்டவம்', 'திரௌபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பகாசூரன்'.  இதில் 'சாணி காயிதம்', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்த இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 

இவருடன் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃபாருக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். சமூக கருத்தை வலியுறுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன் ஜி தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகராக உயர்ந்திருக்கும் இயக்குநர் செல்வராகவனின் ஆன்மீக தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

இந்த படத்தின் டீசர் ஓகஸ்ட் 28ஆம் திகதி காலையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. டீசரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்று இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37