ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46.
மணி நாகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'பென்சில்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதையடுத்து, கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா நடிப்பில் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தை முடித்து அதன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று (25) அவருக்கு மாரடைப்பு ஏற்பட , வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவரது இந்த திடீர் மரணம் திரைத்துரையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM