பருவ வயதுப் பெண்பிள்ளைகள் சாப்பிட வேண்டியவை...

Published By: Digital Desk 7

26 Aug, 2022 | 12:12 PM
image

பெண் பிள்ளைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்து, கெட்ட கொழுப்பு, காபோவைதரேற்று அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிட கொடுக்கின்றனர். இதனால் சரியான எடையை பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைரொய்ட், ஹோர்மோன்களின் பாதிப்பு, தாய்மையடைவதில் சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, ஒரு பெண்பிள்ளை பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய உணவுகளை பார்த்துப் பார்த்து கொடுங்கள்.

1. கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் கறுப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாக பொடித்தும் சாப்பிடலாம். எலும்புகளுக்கு நல்லது. சீரான மாதவிடாய்க்கும் உகந்தது.  

2. நல்லெண்ணெய் - ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் ஆகிய ஹோர்மோன்கள் செயல்பாட்டுக்கு நல்ல கொழுப்புடைய நல்லெண்ணெயே சிறந்தது. 

3. நாட்டு முட்டை - தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக்கூடாது.

4. கம்பு - வறுத்த கம்பின் தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். 

5. பொட்டுக் கடலை - பொட்டுக் கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து சத்துமாவாக சாப்பிடலாம். 

6. சைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், குறைவாக எடுத்துக்கொள்வது அவசியம். 

7. கீரை வகைகள் - மாதவிடாய் நாட்களில் இரத்தப்போக்கு காரணமாக சிலருக்கு இரத்தசோகை வர வாய்ப்புண்டு. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை - இவற்றில் ஏதேனும் ஒன்றை வாரத்துக்கு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். 

8. பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் நாட்களில் இரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் இரத்தத்தின் அளவும் குறைந்திருக்கும். அதற்கு இவற்றை சாப்பிடுவதே தீர்வாகும். 

9. சத்து மா உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மா உருண்டையை மாதத்துக்கு மூன்று நாட்கள் சாப்பிடலாம். 

10. கொண்டைக் கடலை - கறுப்பு அல்லது வெள்ளை கொண்டைக் கடலையை வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிடலாம். கர்ப்பப்பைக்கு நல்லது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்