விந்து அடங்கிய ஆணுறைகளை வகுப்புக்கு கொண்டுவருமாறு கூறிய ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மரியா இனேஸ் பெரேடோ எனும் இந்த ஆசிரியை, தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் மினேரோஸ் நகரிலுள்ள பாடசாலையொன்றில் பாலியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியையாக நியமிக்கப்பட்டிருந்தவர்.
இவர் தனது வகுப்பிலுள்ள ஆண் மாணவர்கள், அவர்களின் விந்து நிறைந்த ஆணுறைகளை வகுப்புக்கு கொண்டுவருமாறு அண்மையில் அறிவுறுத்தினார்.
பாலியல் கல்வியின் ஒரு அங்கமாக, ஆண் இனப்பெருக்கத் தொகுதி தொடர்பான பாடத்துக்காக இவ்வாறு ஆசிரியை மரியா பெரோடோ கூறினாராம்.
இவ்விடயம் குறித்து மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்தனர். இளம் மாணவர்களின் மனங்களை மோசமாக்குகிறார் என ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டது.
'வீட்டுவேலையாக' விடுக்கப்பட்ட இந்த உத்தரவை மாணவர்கள் பின்பற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரியை மரியா பெரேடோ மன்னிப்பு கோரியுள்ளார்.
அதேவேளை, தான் நெறிபிறழ்ந்த ஒருவர் அல்லர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆசிரியை மரியா பெரேடா மேலும் கூறுகையில், 'நான், 4 சிறிய பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் தாய்.
ஈரமான இடமொன்றில் அல்லது சூழலில் விந்தணுக்கள் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்பதை ஓர் ஆசிரியையாக விளக்குவதே எனது நோக்கம். சில ஊடகங்கள் கூறுவதைப் போல் நான் நெறிபிறழ்ந்தவள் அல்ல.
கர்ப்பமடைவதை தவிர்க்க வேண்டுமானால் இப்பொருளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு எச்சரிப்பதும் இப்பாடத்தின் நோக்கமாக இருந்தது. நான் எவரையும் கொல்லவில்லை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தவில்லை.
பாலியல் கல்வி போதித்தமைக்காக நான் சிறைக்கு செல்ல வேண்டுமென்றால், நான் தவறு செய்திருந்தால், மினேரோஸ் மற்றும் பொலீவியா மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், தற்போது நாம் மாணவர்களை உளவியல் ரீதியாக நேர்காணல் செய்து வருகிறோம். இதன் பெறுபேறு அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப் படும்' எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM