சிறுநீர் கழிப்பதற்காக விழித்தெழுந்த இளைஞர் ஒருவர், சவப்பெட்டியொன்றுக்குள் தான் அடைக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பொலீவியால் இடம்பெற்றுள்ளது.
விக்டர் ஹியூகோ மிக்கா அல்வாரெஸ் எனும் 30 வயதான இளைஞர், மனிதப் பலி கொடுப்பதற்காக தான் உயிருடன் புதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான பொலீவியாவின் எல் அட்டோ நகரில் அண்மையில் நடைபெற்ற பூமி மாதா திருவிழாவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்த வேளையில் இந்நிலையை தான் எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிவியாவில் வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் பூமி மாதா திருவிழா நடைபெறும். பூர்வீக குடிமக்கள் 'பச்சமமா' எனும் பூமி மாதாவுக்கு பூஜைகள் செய்து இவ்விழாவை கொண்டாடுவர்.
தீமூட்டி, மிருகக் கொழுப்பு, மூலிகைத் தாவரங்கள், முட்டைகள், இனிப்புகள் உட்பட பல்வேறு பொருட்களைப் படைத்து பச்சமமாவை மக்கள் வழிபடுவர்.
எல் அட்டோ நகரில் திருவிழா பார்க்கச் சென்ற விக்டர் ஹியூகோ, இரவில் மது அருந்தி நடனமாடிக் கொண்டிருந்த பின் உணர்விழந்து உறங்கவிட்ட பின்னர் சவப்பெட்டியொன்றுக்குள் அவர் விழித்தெழுந்தாராம்.
இது தொடர்பாக விக்டர் ஹியூகோ மிக்கா அல்வாரெஸ் கூறுகையில்,
"விழா ஆரம்பமாகுவற்கு முன் இரவில் நாம் நடனமாட சென்றிருந்தோம். அதன்பின் நடந்தவை எனக்கு நினைவில்லை.
எனக்கு நினைவில் உள்ள விடயம் என்னவென்றால், நான் படுக்கையில்
இருப்பதாக எண்ணியதுடன், சிறுநீர் கழப்பதற்காக எழ முயன்றேன். ஆனால் என்னால் நகர முடிமயவில்லை.
கண்ணாடி பெட்டிக்குள் நான் அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். கண்ணாடிக்கு மேல் மண், சேறு மூடியிருந்தன.
என்னால் கண்ணாடியை உடைக்க முடிந்தது. கண்ணாடியை உடைத்தவுடன் மண் உள்ளே வர ஆரம்பித்தது. கண்ணாடியை தள்ளி நான் வெளியே வந்தேன்.
அதன் பின்னர் நான் பொலிஸ் நிலையம் சென்று எனக்கு நடந்ததை தெரிவித்தேன், ஆனால் நான் கூறுவதை அவர்கள் நம்ப மறுத்தனர்.
நான் அப்போதும் மதுபோதையில் இருப்பதாக அவர்கள் எண்ணினர். வீட்டுக்குச் சென்று போதையை தெளியச் செய்துகொள்ளுமாறு அவர்கள் கூறினர்' என்றார்.
எனினும், பின்னர் அவர் ஊடகங்களிடம் தனது கதையை கூறினார்.
தான் மது அருந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள அச்சாச்சி எனும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டிருந்ததாகவும், பச்சமமாவுக்கு மனிதப் பலி கொடுப்பதற்காக தான் புதைக்கப்பட்டதில் சந்தேகமில்லை எனவும் விக்டர் ஹியூகோ மிக்கா அல் வரெஸ் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM