வெள்ளவத்தையில் வர்த்தக நிலையமொன்றை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பணம், இரு டீவீடி பிளேயர்கள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவல மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த 4 சந்தேகநபர்களையும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.