(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் மின்வலுத்துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வினை இலங்கை மின்சார சபை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் ஆண்டும் மின்சார கட்டணத்தை பன்மடங்கு அதிகரிக்க நேரிடும்.
சூரிய மின்னுற்பத்தியினை ஊக்குவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையினை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சூரிய மின் சக்தி கைத்தொழிற்துறை அமைப்பின் செயலாளர் லக்மால் பெர்னான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய வாணிப சபையின் காரியாலயத்தில் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்னுற்பத்தி மற்றும் மின்பாவனைக்கான கேள்வி எழுந்துள்ள பின்னணியில் இலங்கை மின்சார சபை 239 சதவீதத்தினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு கோரிய போதும் 75 சதவீதத்தினால் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியது.இவ்வாண்டில் மாத்திரம் இலங்கை மின்சார சபை 500 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.
எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலையேற்றம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றினால் எதிர்வரும் காலங்களில் மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிடும்.மின்சார துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணாவிடின் எதிர்வரும் ஆண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிடும்.
இலங்கையானது புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள கூடிய நாடாக காணப்படும் பட்சத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பங்களிப்பு 35 சதவீதமாக குறைவடைந்துள்ளது.எரிபொருள் மற்றும் அனல் மின்நிலையங்கள் ஊடாக 65 சதவீத அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
மின்னுற்பத்திக்கான கேள்வி மற்றும் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மின்சார சபை தவறுகளை திருத்திக்கொண்டு முறையான திட்டத்தை செயற்படுத்தாவிடின் எதிர்வரும் காலங்களில் மின்னுற்பத்தி துறையில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிடும்.2023ஆம் ஆண்டு நிலக்கரி இறக்குமதிக்கு மாத்திரம் 400 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்துள்ளது
தற்போதைய மின்வலுத்துறை நெருக்கடிக்கு தீர்வு காண சூரிய சக்தி மின்னுற்பத்தியை விரிவுப்படுத்த அரசாங்கம் உரிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
சூரிய சக்தி மின்னுற்பத்தி குறித்து ஆரம்பத்திலிருந்து கவனம் செலுத்தியிருந்தால் தற்போதைய மின் நெருக்கடியினை இயலுமான அளவு தவிர்த்திருக்கலாம்.
சூரிய மின்சக்தி அமைப்புக்களை தேசிய மின் தொகுப்பில் ஒருங்கிணைப்பதால் அரச நிதி செலவாகாது.முதலீட்டுத் தொகை மின்சார நுகர்வோரால் அதன் செலவு ஏற்றுக்கொள்ளப்படும்.இதுவரையில் மின்நுகர்வோர் ஊடாக 600 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி அமைப்பின் திறனை விரிவுப்படுத்துவது நாட்டில் மின்சார பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்,காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும்,சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் வகையில் சூரிய மின்பாவனையினை ஊக்குவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM