bestweb

நடிகர் கருணாசின் 'ஆதார்' திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Vishnu

25 Aug, 2022 | 04:04 PM
image

அரசியல்வாதியும், நடிகருமான கருணாஸ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'ஆதார்' திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், திலீபன் நடிகைகள் இனியா, ரித்விகா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். எளிய மனிதனின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று பட மாளிகையில் 'ஆதார்' வெளியாகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் திரையுலகின் மூத்த படைப்பாளிகள் பலரும் பாராட்டிய இந்த 'ஆதார்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை விவரிக்கும்...

2025-07-10 16:58:52
news-image

கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' படத்தின் டைட்டில்...

2025-07-10 16:58:36
news-image

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க...

2025-07-10 16:53:40
news-image

''நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டில்...

2025-07-09 18:34:55
news-image

சிவகார்த்திகேயனின் 'மதராசி'யுடன் மோதும் வெற்றி மாறனின்...

2025-07-09 18:19:56
news-image

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும்...

2025-07-09 18:19:30
news-image

கிறித்தவ மத கன்னியாஸ்திரிகளின் வாழ்வியலை விவரிக்கும்...

2025-07-09 18:21:37
news-image

சினிமா என்பது அவதானிக்க இயலாத விளையாட்டு...

2025-07-09 18:14:24
news-image

இசையமைப்பாளருக்கு கைகடிகாரத்தை பரிசளித்த சரத்குமார்

2025-07-09 18:09:38
news-image

நடிகர் தமன் நடிக்கும் 'ஜென்ம நட்சத்திரம்'...

2025-07-09 17:59:35
news-image

பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி...

2025-07-09 14:51:23
news-image

நடிகர் கே ஜே ஆர் நடிக்கும்...

2025-07-08 17:28:14