கொட்டகலை ரொசிட்டா தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு

By Vishnu

25 Aug, 2022 | 11:58 AM
image

(க.கிஷாந்தன்)

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தி வந்துள்ளது.

இதனையடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் குறித்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜீவன் தொண்டமான், உடனடியாக கொட்டகலை ரொசிட்டா தோட்ட காரியாலயத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு தோட்ட முகாமையாளருடன், தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் கெடுபிடிகளை சுட்டிக்காட்டி கலந்துரையாடினார்.

அதன்பிறகு, இதனை ஏற்றுக்கொண்ட தோட்டநிர்வாகம், ஒரு சுமுகமான நிலைமைக்கு வந்தது. இதனையடுத்து, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் வழமைக்கு திரும்பினர்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.பி சக்திவேல், கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் பாலசுப்பிரமணியம், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01