ராட்­டி­னத்தில் பாலியல் உற­வு­கொண்ட தம்­பதியினர் கைது

Published By: Vishnu

25 Aug, 2022 | 11:21 AM
image

உல்­லாசப் பூங்­கா­வொன்றின் ராட்­டி­ணத்தில் பாலியல் உற­வு­கொண்ட குற்­றச்­சாட்டில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒரு ஜோடி­யினர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

32 வய­தான டேவிட் டேவிஸ், ஹீதர் ஜோன்ஸ்டன் ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

இவர்கள் ஒஹையோ மாநி­லத்­தி­லுள்ள உல்­லாசப் பூங்­கா­வொன்றின் பாரிய ராட்­டி­ணத்தில் பொது­மக்கள் முன்­னி­லையில் பாலியல் உற­வு­கொண்­டனர் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இவர்­களின் ஒழுக்­கக்­கே­டான நட­வ­டிக்­கைக்கு பல சாட்­சிகள் உள்­ளனர் எனவும், அவர்­களில் சிலர் சிறார்கள் எனவும் சான்­டஸ்கி நகர பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தம்மை மக்கள் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பதை இவர்கள் அறிந்­தி­ருந்­தனர் எனவும், அப்­போதும் இவ்­வி­ரு­வரும் தமது நட­வ­டிக்­கையை தொடர்ந்­தனர் எனவும் சாட்­சி­யா­ளர்கள் பொலி­ஸாரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

பொலிஸார் விசா­ரித்­த­போது, ஆரம்­பத்தில் இவர்கள் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தனர் என பொலிஸார் தெரி­வித்­தனர். 

தவ­றி­வி­ழுந்த சிகரெட் பக்கெட் ஒன்றை தான் எடுப்­ப­தற்கு முயன்­ற­தா­கவும் தனக்கு டேவிஸ் உதவ முயன்றார் எனவும் ஹீதர் ஜோன்ஸ்டன் கூறினார். எனினும், ராட்டிணத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டதை இவர்கள் பின்னர் ஒப்புக்கொண்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்