(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, மொத்தமாகவே சுமார் 5 கிலோ வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும், எனினும் அதற்கு முன்னர் சி.ஐ.டி.யினரின் விசாரணை ஊடாக வனாத்துவில்லு - லக்டோவத்தையில் சுமார் 1,200 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் ஊடாக மிகப் பெரும் அழிவு தடுக்கப்பட்டதாக சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க சாட்சியமளித்தார்.
இது தொடர்பில் நீதிமன்றம் விஷேடமாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
புத்தளம் - வணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கு நேற்று (24) புத்தளம் மேல் நீதிமன்றில் நீதிபதிகளான ஹசித்த பொன்னம்பெரும, நிசாந்த ஹப்பு ஆர்ச்சி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணசிக்கு வந்தது.
இதன்போதே அரச சட்டவாதி உதார கருணாதிலகவின் நெறிப்படுத்தலில் சாட்சியமளிக்கையில், இந்த வெடிபொருள் விவகாரத்தை விசாரணை அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க மேலுள்ள விடயத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வழக்கில், தற்போதும் மரணமடைந்துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாசகார அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் எண்ணத்துடன் வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்க சதி செய்தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை சேகரித்தமை, வெடிபொருட்களை உற்பத்தி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிகளுக்கு எதிராக விஷேட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெடிபொருள் சேகரிப்பு, தயாரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
அபூ தஹ்தா எனும் அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நௌபர் மௌலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நௌபர், அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மௌலவி ஆகிய 6 பேர் மீது கூற்றம் சுமத்தப்ப்ட்டுள்ளது. இதில் முறையே 1,2,5,6 ஆம் பிரதிவாதிகளுகு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் பிணையளித்துள்ள நிலையில், 1,2 ஆம் பிரதிவாதிகள் பிணையில் வெளியே உள்ளனர். ஏனையோர் வேறு வழக்குகள் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர்.
நேற்று வழக்கு விசாரணைக்காக அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
முதல் பிரதிவாதியான அபூ தஹ்தா எனப்படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுத களஞ்சியத்துடன் கூடிய வணாத்தவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உதார கருணாதிலக, அரச சட்டவாதி இமேஷா டி அல்விஸுடன் ஆஜராகி சாட்சி நெறிப்படுத்தலை முன்னெடுத்தார்.
1,2,4 ஆம் பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணிகளான சஜாத், நதீஹா அப்பாஸுடன் ஆஜரானார். 6 ஆவது பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணு கஸ்ஸாஇ ஹுசைன் ஆஜரானார். ஏனைய இருவர் தொடர்பிலும் சட்டத்தரணி பசால், அல்தாப் ஆகியோர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்டோர் தரப்பினர் எனும் ரீதியில் வழக்கை மேர்பார்வைச் எய சட்டத்தரணி சுரேன் பெரேரவௌக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அரச சட்டவாதியின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்த வழக்கின் 11 ஆவது சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க சாட்சியமலித்து பின் வரும் விடயங்களை வெளிப்படுத்தினார்.
'வனாத்துவில்லுவில் வெடிபொருள் மீட்கப்பட்ட பின்னர் முன்னெடுத்த விசாரணைகளில் சஹ்ரான் ஹஷீம் மற்றும் மொஹம்மட் எனும் இருவரின் தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்டன. மொஹம்மட் எனும் பெயரால் அறியப்பட்ட நபர் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த ஹஸ்தூன் என உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தெரியவந்தது.
சஹ்ரானை கைது செய்ய கடந்த 2019 ஜனவரி 23 முதல் முயற்சிகள் முன்னெட்த்த போதும் அவரை கைது செய்ய முடியவில்லை. அவருக்கு எஹிராக நாம் வெளிநாட்டு பயணத் தடையையும் பெற்றிருந்தோம்.
சஹ்ரான் சாதாரண தொலைபேசி அழைப்புக்களைக் கூட முன்னெடுக்கவில்லை. அவர் திரிமா எனும் செயழியை பயன்படுத்தியதால் அவரை நெருங்க முடியவில்லை. அந்த செயழியை எந்த தொலைபேசி சேவைகள் நிறுவனத்தினாலும் ஹெக் செய்ய முடியவில்லை.
சஹ்ரானை தேடி நாம் அவரது வீட்டுக்கு சென்றோம். அவரது மனைவியான பாத்திமா ஹாதியாவின் கெக்குனுகொல்ல வீட்டுக்கும் சென்றோம். அங்கு சென்ற எல்லா சத்தர்ப்பத்திலும், கட்டுவாபிட்டி தேவாலய குண்டுதாரி ஹஸ்தூனின் மனைவி சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேத்திரன் அங்கு சஹ்ரானின் மனைவியுடனேயே தங்கியிருந்தார்.
நாம் வனாத்துவிலுவில் வெடிபொருட்களை மீட்டதால் மிகப் பெரும் அழிவு தவிர்க்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் , வனாத்துவில்லுவில் மீட்கப்பட்ட வெடிபொருட்களுக்கு சமமானவை. அங்கு வைத்து இரசாயன கலவை தொடர்பிலான விடயங்கள் அடங்கிய ஒரு கடிதம் பிரதிவாதி ஒர்வரிடமிருந்து மீட்கப்பட்டது.
இதனைவிட இரசாயன கலவைகள் செய்யும் வகையிலான உபகரணக்களும் மீட்கப்பட்டன.( உபகரணங்களையும் அடையாளம் காடினார்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பெரும்பாலும் அனைத்து குண்டுதாரிகளும் பயன்படுத்திய வெடிபொருளின் அளவு தலா 500 கிராமாமும். ஒரே ஒரு தாக்குதலை மட்டும் 800 கிராம் நிறையுடைய வெடிப்பொருளை பயனப்படுத்தியிருந்தார்.
அதன்படி அத்தாக்குதலுக்கு பயன்படுத்திய மொத்த வெடிபொருளின் அளவு 5 கிலோவாகும். எனினும் வனாத்துவில்லுவில் நாம் கைப்பற்றிய வெடிபொருள் சுமார் 1,200 கிலோ எடை கொண்டது. அப்படியானால் மிகப் பெரும் அழிவு இதனூடாக தவிர்க்கப்பட்டது என்பதை நீதிமன்றம் அவதானிக்க வேண்டும்.' என மாரசிங்க சாட்சியமளித்தார்.
குறித்த சாட்சியம் தொடர்பிலான குறுக்கு விசாரணைகள் இன்று 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM