முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்!

Published By: Devika

25 Aug, 2022 | 10:53 AM
image

முருங்கை மரத்தை பொறுத்தவரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும். இதில் விட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்­ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கல்சியம், மக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முருங்கைக்கீரையோடு, வெ.பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து உண்டால் நாய்க்கடி குணமாகும். முருங்­கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். முருங்கை இலையை எடுத்துவிட்டு காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். 

முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, சுண்­ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றது.

முருங்கை இலை­களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டியாகும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக்கீரை மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தா­கவும் பயன்படுகிறது. 

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்­கீரையை உணவாக உபயோகித்தால் இரத்தமும், சிறுநீரும் சுத்­தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டா­கிறது.

முருங்கைக்கீரை சூப் மூட்டு வலியையும் போக்க வல்லது. கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்கு­வித்து பிரசவத்தை துரிதப்படுத்தும். 

முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உணவை நன்கு மென்று உண்ணுங்கள்…!”

2025-05-17 13:31:13
news-image

தேனில் ஊறவைத்த பூண்டு… இத்தனை நன்மைகளைத்...

2025-05-16 16:59:52
news-image

விபத்தில் பாதிக்கப்பட்ட விரல்களுக்கான நவீன சத்திர...

2025-05-14 16:05:53
news-image

சிக்குன்குனியாவை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை முன்னெடுங்கள்...

2025-05-14 01:21:04
news-image

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு...

2025-05-12 16:16:50
news-image

அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-05-10 16:22:08
news-image

பாடாய்ப்படுத்தும் சிறுநீர் கசிவு – தீர்வு...

2025-05-09 18:12:40
news-image

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2025-05-09 15:05:46
news-image

பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

2025-05-08 17:25:02
news-image

ஹெமிபரேசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-05-08 15:07:36
news-image

பச்சிளம் குழந்தைகளின் தீரா அழுகைக்கு நிவாரணமளிக்கும்...

2025-05-07 17:36:27
news-image

காது வலி…! காரணம் என்ன?

2025-05-07 16:45:10