கணுக்கால் வலி

Published By: Devika

25 Aug, 2022 | 10:49 AM
image

வீன காலத்தில் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதி­கரிப்பால் பல பெண்­கள் சிரமப்படுகின்றனர். இதனால் சர்க்கரை நோய், கால் வலி போன்ற பாதிப்பு­கள் ஏற்படுகின்றன. 

அதிக உடல் எடையால் ஏற்படும் கணுக்கால் மற்­றும் குதிகால் பாதிப்புகளில் குதிவாதம், கீல்வாதம், தசைநாண் அழற்சி ஆகியவை முக்கியமானவை. 

உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசை­கள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்­ படும் வலி மற்றும் வீக்கமே ‘குதிவாதம்’ எனப்படு­கிறது. எலும்பு மற்றும் சதைப் பகுதியை இணைக்கும் திசுக்­களில் ஏற்படும் அழுத்தத்தை ‘தசைநாண் அழற்சி’ என்று கூறுவார்கள். 

இந்த இரண்டு பாதிப்புகளும் ஆரம்ப நிலையில் இருக்­கும் பொழுது போதுமான ஓய்வு, நீண்ட நேரம் நிற்­பதை குறைத்தல், தினமும் மூன்று அல்­லது நான்கு முறை 15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுத்­தல், குதி­கால் பகு­தியை மேல்நோக்கி வைத்து ஓய்­வெடுத்தல் போன்ற நிவாரண வழிகளைப் பின்­பற்றலாம் அல்லது பாதிக்­கப்­பட்ட பகு­தியை மட்டும் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்க­லாம். 

குதிகால் மற்றும் கணுக்கால் பகுதி நீரினுள் இருக்கும் பொழுது பாதத்தின் மேல்பகுதி வெளியே இருப்பது அவசியம். 

‘கீல்வாதம்’ போன்ற பாதிப்புகள் அழுத்தம் மூலம் மட்டும் இல்லாமல் உணவுப் பழக்கத்தினால் ஏற்­படும் விளைவுகளாகும். அதிகமாக மாமிசம் உட்கொள்ளும் பொழுது யூரிக் அமிலம் மிகுதியாக சுரந்து, கால் பகுதியில் படிந்து வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும். 

இதற்கு மேலே குறிப்பிட்ட தீர்வுகளுடன், உணவுக் கட்டுப்பாடும் அவசியம். மாமிச உணவுகள் மூலம் யூரிக் அமிலம் அதிக­மாக சுரப்பதால், அவற்றைத் தவிர்த்து, தண்ணீர் அதி­கமாக குடிப்பதன் மூலமும் இதற்கு தீர்வு காண­லாம். 

அதிகமாக நடப்பதையும், நிற்பதையும் குறைத்­துக்­கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது நல்லது. குதிகால் பகுதியில் மிருதுவாக இருக்கும் காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

வெறும் காலில் நடப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது சிறந்தது. அதிக எடையால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கும் விதத்தில் எலும்பு மற்றும் அதை சுற்றிய தசைப் பகுதிகளை வலுவாக்குவதற்கு ஏற்ற உணவு­களை சாப்பிடலாம். அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மருத்து­வரை அணுகி உரிய சிகிச்சை மேற்­கொள்­வதே சிறந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04