(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் கடும்போக்கான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்.
மக்கள் பலத்திற்கு முன்னாள் அதிகார பலம் செல்வாக்கு செலுத்தாது என்பதை ஜனாதிபதி வெகுவிரைவில் விளங்கிக்கொள்வார் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிச கட்சியின் காரியாலயத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதிக உணவு பணவீக்கம் உள்ள நாடுகளின பட்டியலில் இலங்கை 5ஆவது நிலையில் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளமை சாதாரனதொரு விடயமல்ல,உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்குமாயின் அதன் தாக்கம் நடுத்தர மக்களுக்கு நேரடியாக செல்வாக்கு செலுத்தும்.
உணவு பாதுகாப்பு குறித்து அரசாங்கம் எவ்வித செயற்திட்டங்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளது.
முட்டை,கோழி இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றம் நடுத்தர மக்களின் போசனை குறித்து கேள்வியெழுப்பியுள்ளது.
நாட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் ஜனாதிபதி அரசியல் ரீதியில் பிறிதொரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்.
ஜனாதிபதி தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசாங்கத்தின் கடும்போக்கான செயற்பாடுகளை எதிர்ப்பு தெரிவித்தவர்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்.
அரசியல் நோக்கத்திற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொது மக்களை அச்சமூட்டும் வகையில் தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்படுவது முற்றிலும் தவறானது.மக்கள் பலத்திற்கு முன் அதிகார பலம் செல்வாக்கு செலுத்தாது என்பதை ஜனாதிபதி வெகுவிரைவில் விளங்கிக்கொள்வார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ள நிலையில் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காமல் அரச தலைவர்கள் செயற்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM