சுப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்'

Published By: Digital Desk 5

24 Aug, 2022 | 02:14 PM
image

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ஜெயிலர்' எனும் புதிய படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு,  ஃபர்ஸ்ட் லுக்குடன் தொடங்கி இருக்கிறது.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஜெயிலர்' இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய்,  பிரியங்கா அருள் மோகன், நடிகர்கள் சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்டண்ட் சிவா சண்டை காட்சிகளை அமைக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

சுப்பர் ஸ்டாரின் 169 வது படமாக தயாராகும் 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடி அணிந்திருந்தாலும் அவருடைய ஆளுமை கொண்ட பார்வை ரசிகர்களை ஆச்சரியத்துடன் பார்வையிட வைத்திருக்கிறது. 

சன் பிக்சர்ஸ்- சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- நெல்சன் திலிப் குமார் கூட்டணியில் தயாராகும் 'ஜெயிலர்' புதிய சாதனையைப் படைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right