பரிசளியுங்கள்!

Published By: Digital Desk 7

24 Aug, 2022 | 01:37 PM
image

பரிசளிப்பது ஒரு கலை. சரியான சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு தகுந்த பரிசை அளிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. பரிசளிப்பதற்கான டிப்ஸ் இதோ:

* விருந்துக்குப் பின் பணத்தை கவரில் போட்டு கொடுக்கும்போது, கவரின் உள்பகுதியில் உங்கள் பெயர், முகவரி, பரிசுத் தொகை ஆகியவற்றை குறிக்கவும்.

* சிறுமியருக்கு ஹேர் க்ளிப், ஹேர் பேண்ட், வளையல்கள், தோடுகள், கலர் ஸ்டிக்கர் பொட்டுகளை கொடுக்கலாம்.

* வயதுக்கேற்றவாறு புத்தகங்களை பரிசாக கொடுப்பது, பெறுபவருக்கு உற்ற நண்பரை பெற்றுத் தருவதற்கு சமம்.

* உயர் அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளித்தால், தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதோடு, நீங்கள் காக்காய் பிடிக்க முயல்வதாக மனதில் கொள்வர், அதை தவிர்க்கவும்.

* பெண்களுக்கு தாம்பூலத்துடன் அரக்கு, அடர்ந்த பச்சை, மஞ்சள் நிறத்தில் தரமான ரவிக்கை துணி வைத்து கொடுக்கலாம்.

* திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு நேரில் சென்று பரிசளிக்க முடியாவிட்டால், கொரியர் மூலம் அனுப்பினால், செலவும் மிச்சம். குறித்த நேரத்திலும் சென்றடையும்.

விலை உயர்ந்த அலங்கார பொருட்களை விட, சாதாரண துண்டு, மப்ளர், சொக்ஸ் மற்றும் இசைத்தட்டு போன்றவற்றை வயதானோருக்கு அளிக்கலாம்.

தோட்டக்கலையில் ஆர்வமுள்ளோருக்கு செடிகள் மற்றும் மரக் கன்றுகளை தந்தால், இவை வளர்ந்து காலத்துக்கும் மகிழ்ச்சியையும் பலனையும் தரும்.

* நெருங்கிய நண்பர் மற்றும் உறவினருக்கு திருமண பரிசு தரும்போது, அவர்களின் தேவை என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற் போல் பரிசளிக்கலாம்.

* பணமாக கொடுப்பதை விட, 'கிப்ட்' ,'செக்' மற்றும் 'வவுச்சர்'களாக கொடுத்தால் சம்பந்தப்பட்டோர் தேவைக்கேற்ப உபயோகப்படுத்துவர்.

* யார், எந்தப் பரிசளித்தாலும் பெறுபவர், கொடுப்பவர்களுக்கு 'நன்றி' சொல்வது நாகரிகத்தை காட்டும். நன்றி சொல்லும் நாகரிகம் இல்லாதவர்களுக்கு இந்தக் குறிப்பு ரொம்பவே பொருந்தும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்