மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச. சாரதி யாழில் கைது!

Published By: Vishnu

24 Aug, 2022 | 01:36 PM
image

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ,மானிப்பாய் பொலிஸார் சண்டிலிப்பாய் கட்டுடை பகுதியில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். 

அதன் போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.  அதேவேளை பிறிதொரு சாரதியை வரவழைத்து பேருந்தினை அனுப்பி வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47