2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதனை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டமானது மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, வரி மூலமாக அனைத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு தேவையான விடயங்கள் சேர்க்கப்படவில்லை.
முக்கியமாக வேலைவாய்ப்பு தொடர்பில் எந்த வித ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. இது எதிர்கால இளைஞர்களை பாதிக்கக்கூடிய விடயமாகும்.
நாட்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள இளைஞர்கள் குடும்ப வருமானத்திற்காக முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு தள்ளப்படுகின்றனர் என்றார்.
வரவு செலவுத்திட்டத்தில் நன்மை தரக்கூடிய விடயங்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் நாம் வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM