2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் வாகனங்களுக்கான அதி குறைந்த அபராதத்தொகையை 2500 ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் மற்றும் கொள்கலன்கள் போக்குவரத்து சங்கம் என்பன தமது எதிர்ப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.

நேற்று தனியார் பஸ் உரிமையளார்கள் சங்கம் குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்று பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் மற்றும் கொள்கலன்கள் போக்குவரத்து சங்கம் என்பன தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும் தனியார் பஸ் உரிமையளார்கள் சங்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.