(எம்.வை.எம்.சியாம்)
அரசாங்கத்தின் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு நாட்டின் அப்பாவி வறிய மக்களின் கழுத்தை நெறிபதற்கு சமம் என்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உள்ள மக்களை மேலும் துன்பத்திற்கு தள்ளும் செயற்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு என்பது ஒருவேளை உணவினை கூட உண்பதற்கு முடியாது வீதிகளில் இறங்கி போராடிய மக்களின் கழுத்தை நெறிப்பதற்கு சமம்.
மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் கொண்டு வருவது முதல் அனைத்து வழிகளிலும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது.
மோசடியில் ஈடுபடும் மிகப்பெரிய குழுவினர் இதில் ஈடுபடுவதோடு அவர்கள் அரசாங்கத்தின் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் ஊடாக இந்த மோசடிகளை செய்து வருகிறார்கள்.
இருப்பினும், அவர்கள் தங்களுடைய வயிற்றினை மாத்திரம் முழுமையாக நிரப்பி கொண்டு நாட்டின் அப்பாவி வறிய மக்கள் துன்பத்தில் தள்ளுகிறார்கள்.
மேலும் வறிய மக்களின் பைகளில் உள்ள பணத்தை கொண்டு அவர்களின் வயிற்றை நிரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாகவே நாம் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு கடுமையான எதிர்பினை வெளியிடுகிறோம் 200 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யக்கூடிய மண்ணெண்ணெயை இன்று 87 ரூபாவில் இருந்து 340 ரூபாவிற்கு அதிகரித்து மக்களை தாங்கி கொள்ள முடியாத வாழ்க்கையை செலவினை அவர்கள் மேல் திணிக்கிறார்கள்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்கள், விவசாயிகள் உட்பட அனைவரையும் பாதித்து இருக்கிறது இந்நிலையில் கொழும்பு பகுதிகளில் வாழும் மக்கள் தமக்கு தேவையான உணவினை சமைப்பதற்கு அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்ய முடியாமல் மண்ணெண்ணெய் பாவித்தார்கள்.
இன்றைய மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மேலும் அவர்களை நெருக்கடிகளுக்கு தள்ளியுள்ளது. இதை விட நாட்டு மக்களை கொலை செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM