(நா.தனுஜா)
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்களைக் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்கள் பயன்படுத்தப்படுவது குறித்து நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.
பயங்கரவாதத்தடைச்சட்டமானது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதேயன்றி, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பிரயோகிக்கும்போது நிகழக்கூடிய குற்றங்கள் தொடர்பில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு முறையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக இரத்துச்செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகிய மூவரையும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (22) கையெழுத்திட்டார்.
அதுகுறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு தரப்பினர் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், 'ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்துவைப்பதற்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தவறான முறையில் பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்களைக் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்கள் பயன்படுத்தப்படுவது குறித்து நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.
பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பது நபர்களைக் கைதுசெய்து, நீண்டகாலத்திற்குத் தடுத்துவைப்பதற்கு ஏதுவான பரந்துபட்ட அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குகின்ற மிகமோசமானதொரு சட்டமாகும். இவ்வாறான தடுத்துவைப்புக்களின்போது தடுப்புக்காவலில் உள்ள குறித்த நபர் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக்கூடிய மற்றும் மிருகத்தனமான முறையில் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், குறிப்பாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படும் பட்சத்திலேயே பயன்படுத்தப்படவேண்டும்.
பயங்கரவாதத்தடைச்சட்டமானது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதேயன்றி, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பிரயோகிக்கும்போது நிகழக்கூடிய குற்றங்கள் தொடர்பில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அதற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு தண்டனைச்சட்டக்கோவை உள்ளடங்கலாகப் பொதுச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்த பின்னணியிலேயே இப்போது அச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். மேலும் இச்சட்டத்தின் பிரயோகம் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதில் கரிசனைக்குரிய ஓர் விடயமாக இருக்கும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம். எனவே இவ்வாறானதொரு முறையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று ஜனாதிபதியையும் சட்ட அமுலாக்க அதிகாரிகளையும் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை இரத்துச்செய்யுமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM