(எம்.வை.எம்.சியாம்)
புரட்சிக்கு பங்களித்த இளைஞர்கள் மீது அரசு அடக்குமுறையை பிரயோகிக்கின்றது. அரச பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கம் உடன் வெளியேற வேண்டும். அநீதிக்கும் அடக்குமுறைக்களுக்கும் எதிராக குரல் கொடுத்த இளைஞர் சமூகத்துடன் ஒன்றினைந்து செயற்படுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இளைஞர்கள் பாரிய புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர். அதன் காரணமாக நாட்டை பாதாளத்தில் தள்ளிய ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க முடிந்தது. எனினும் புரட்சியையும், போராட்டத்தையும் முன்னெடுத்த இளைஞர்களுக்கு எதிராக அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக அடக்குமுறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இன்று இளைஞர்களை வேட்டையாடும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அரச பயங்கரவாதத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பாரதூரமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நவீன இலங்கையை உருவாக்குவதற்காக பொதுமக்கள் கோரும் சமூக மாற்றத்திற்கான உடன்பாட்டை எட்டுவதற்காக சீர்த்திருங்களுக்கான தேசிய வேலைத்திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியின் ஒருங்கிணைக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான செயலகமொன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக முன்நிற்கும் இளைஞர் சமூகத்துடன் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM