யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த உத்தரவினை யாழ். நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரன் நேற்று பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டதுடன், சிங்கள மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.