(எம்.வை.எம்.சியாம்)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக அடக்குமுறைகளை பிரயோகிப்பதன் மூலம் பொதுஜன பெரமுனவினரை திருப்திபடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார்.
நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்பத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை கவனத்தில் கொள்ளாமல் அடக்குமுறை கையாளுவதன் மூலம் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை வலுப்பெற செய்யும் செயற்பாடுகளையே ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கட்டாயம் தேவைப்படும் இந்த சந்தர்பத்தில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வது சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை வலுப்பெற செய்யும்.
அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்கிறது? ஊடக சுதந்திரம் பேணப்படுகிறதா? போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே சர்வதேசநாடுகள் உதவிகளை வழங்கும்.
இருப்பினும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி போராட்டகாரர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுமதி வழங்கி இருக்கிறார். சர்வதேச நாடுகள் எதிர்க்கும் விடயங்களை செய்யும் போது சர்வதேசத்தின் உதவிகள் கை நழுவி செல்லும்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை திருப்திபடுத்த ஜனாதிபதியினால் இவ்வாறான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவு 400 சதவீதமாக ஆக உயர்வடைந்துள்ளது. அமைச்சுப்பதவிகளை ஏற்காமல் , நிபந்தனைகள் இன்றி பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு உதவுவதற்கு நாம் தயார்.
ஆனால் அரசாங்கத்திடம் தீர்கமான வேலைத்திட்டங்கள் எதுவுமில்லை. அரசாங்கத்தில் பதவிகளை அதிகரித்து கொள்ளுதல், பொதுஜன பெரமுனவினரை திருப்திபடுத்துதல் , பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான அரசாங்கத்துடன் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது ? என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM