ஆசிரிய பயிலுனர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் - அரசாங்கம்

Published By: Vishnu

23 Aug, 2022 | 10:04 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் முறையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 2 வருடங்கள் கல்விசார் பயிற்சிகளிலும் ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

ஒரு வருடகால உள்ளகப் பயிற்சிக்காக கல்வியியல் கல்லூரிகளில் தங்குமிடம்  வழங்கப்படாததுடன், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஆசிரிய பயிலுநர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு கல்விசார் பயிற்சியின் போது செலுத்தப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. அதனால், ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது கிடைக்கின்ற கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் மேலும் 10,000 நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58