பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் - கணேசலிங்கம்

Published By: Vishnu

23 Aug, 2022 | 10:06 PM
image

(க.கிஷாந்தன்)

"ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்." - என்று மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அட்டனில் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி கூட்டமைப்பின் தலைவர் கணேசலிங்கம் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. மக்கள் மீது சுமைகள் திணிக்கப்பட்டன. எனவே, நாட்டை மீட்கவும், அரசியல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புகளை கோரியுமே மக்கள் வீதிகளில் இறங்கினர். ஜனநாயக வழியில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளையாக முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு பதவி விலக வேண்டி ஏற்பட்டது.

போராட்டத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களும் அந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட வேண்டியவர்கள் சுமந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் நீதிக்காக போராடியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொருளாதார சிக்கலை பயன்படுத்தி, மலையக சிறார்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுமி ரமணியின் மரணத்தை சாதாரணமாக கருதிவிட முடியாது. " - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26