(எம்.எம்.சில்வெஸ்டர்)
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடந்த இரண்டு தினங்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் விடுவிக்கப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதற்கும் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலும் மண்ணெண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளதால், அதிகளவான மண்ணெண்ணெய் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் பொது மக்கள் தங்களுக்கான மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் நாட்டில் நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, 87 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்ணெண்ணெய்யை பயன்படுத்தும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் என புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு விசேட நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனால், வறுமை கோட்டின் கீழ் வாழும் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM