சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இரு தினங்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் விடுவிப்பு

Published By: Digital Desk 5

23 Aug, 2022 | 04:28 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடந்த இரண்டு தினங்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் விடுவிக்கப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதற்கும் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் மண்ணெண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளதால், அதிகளவான  மண்ணெண்ணெய் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  இனிவரும் காலங்களில் பொது மக்கள் தங்களுக்கான மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் நாட்டில் நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இ‍தேவேளை,  87 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்  விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்ணெண்ணெய்யை பயன்படுத்தும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் என புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு விசேட நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனால், வறுமை கோட்டின் கீழ் வாழும் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09