குமார் சுகுணா
பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கைக்கு மீண்டும் ஒரு தலைவலியாக சீனா இந்தியாவிற்கு இடையிலான அதிகார போட்டி தலைத்தூக்கியுள்ளது. 1950களில் சுதந்திர இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்தீர தன்மையுடன் இருந்த போதிலும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கை வகுப்பு ,இன துவேசம் என்பன கட்டியெழ வேண்டிய இலங்கையின் பொருளாதாரத்தை நசுக்கிவிட்டது.
சிங்கபூரே நம்மை பார்த்துதான் வளர்ந்தது என்று மார் தட்டிய நாம் இன்று பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் கிடக்கின்றோம். அதன் தொடர்ச்சி இலங்கை உலகில் கடன் வாங்காத நாடே இல்லை என்ற நிலையை இன்று எட்டியுள்ளது. இந்த கடன்களில் சீனாவின் பங்கு அபரிதம். அதிகளவிலான கடன் இலங்கை அரசியல் தலைவர்கள் குறிப்பாக ராஜபக் ஷ குடும்பத்தாரின் ஆட்சியில் வாங்கப்பட்டதோடு அந்த கடன் பொறியிலேயே இலங்கை இன்று சிக்கி சீரழிந்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த சில காலமாகவே சீனா "String of Pearls" (முத்துச் சரம்) உத்தியின் மூலம் தெற்காசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே பட்டுப்பாதை திட்டம் மூலமாக சீனாவின் ஆதிக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி வருகிறது . உலகம் பூராகவும் சீனாவின் கரங்கள் இம் முயற்சியூடாக நீண்டு வருகிறது. பொருளாதார ரீதியிலும் அரசியல், சமூக, கலாசார ரீதியிலும் சீனாவின் ஆதிக்கம் வேகமாக பரவிவருகிறது. இதனை அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் சந்தேகத்துடனே பார்க்கின்றன.. ஆயினும் எதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பல உட்கட்மைப்பு உதவிகள், கொரோனா கால உதவிகள், கடன் என சீனா தனதுசெல்வாக்கை ஸ்தீரப்படுத்திவிட்டது. இது சீனாவின் போட்டி நாடான இந்தியாவுக்கு பெரும் அசடசுறுத்தலாக அமைய கூடும் என ஏற்கனவே அரசியல் விஞ்ஞானிகள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
பொருளாதார சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டுள்ள இத்தருணத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்கிவருகின்றது. ஆயினும் இலங்கையில் அம்பாந்தோட்ட துறைமுகம் உள்ளிட்ட பல இடங்கள் ஏற்கனவே சீனாவின் கைகளுக்குள் சென்றுவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரில் சீனாவின் நிலைப்பாடு மற்றும் தாய்வான் கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கம்.
அண்மையில் அங்கு சீனா நடத்திய ஏவுகணை பரிசோதனைகள் என்பன உலக அரசியலில் சீனா மீதான பார்வையை ஏற்படுத்தியிருக்கின்றது. சீனா தனது அதிகார இருப்பை இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் நோக்கில் உலகில் தன் வசம் உள்ள பல நாடுகளில் தனது இராணுவ செல்வாக்ககை வெளிபடுத்தி கொண்டிருக்கின்றது. அந்தவகையில் சீனாவின் மிக பெரிய உளவு கப்பல் இந்தியாவின் எதிர்பை மீறி இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
முன்னதாக, இந்த கப்பல் கடந்த 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என திட்டமிடப்பட்டிருந்து. எனினும், பின்னர் ஏற்பட்ட சர்ச்சை நிலையை அடுத்து, கப்பலின் வரவில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் குறித்த கப்பல் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-இல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது இராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் அம்பாந்தோட்டையில் ஒருவார காலத்திற்கு தங்குகிறது. இது இந்தியாவிற்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏன்எனில் இந்த நவீன உளவு கப்பல் மூலம் இந்தியா குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்தியா இதற்கு தனது எதிர்பை வெளியிட்டு வந்தது. ஆயினும் இந்தக் கப்பல் இலங்கைக்குள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் பல உதவிகளை இலங்கை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் இந்த கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்துள்மை இந்தியாவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்த கூடும். ஆனால் இது சாதாரண நடை முறை என இலங்கை கூறிவிட்டது. இந்நிலையில். இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய அரசு இலங்கைக்கு டோர்னியர்-228 (DORNIER-228) என்ற கடல்சார் உளவு விமானம் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறது. சீனாவின் கப்பல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் இந்தியா இந்த விமானத்தை வழங்கியிருக்கின்றது.
இந்திய சுதந்திர தினத்தில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வைத்து ஜனாதிபதி ரணிலிடம் விமானம் கையளிக்கப்பட்டது. சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முதலில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தியா அதனை நிராகரித்திருந்ததுடன், , சமுத்திர கண்காணிப்பு தொடர்பிலான விசேட விமானத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது சீனாவின் அச்சுறுத்தலுக்கான இந்தியாவின் பதிலடியாக பார்க்கப்படுகின்றது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டியில் இலங்கை இரண்டு நாடுகள் என்ன சொன்னாலும் செய்து விட்டு நமக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக்கொண்டால்போதும் என்ற மனநிலையில் உள்ளது போல தோன்றுகின்றது. ஆயினும் இந்த அதிகார போர் உச்சம் பெற்றால் நாளை பாதிக்கப்படுவது நிச்சயம் இலங்கையாகதான் இருக்கும்.. தாய்வான் கடல் பரப்பில் நடத்திய ஏவுகணை சோதனை போல இலங்கையின் அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நடத்தப்பட்டால் நிலமை என்னவாகும். நிச்சயம் அது இலங்கைக்கு மோசமான பலனை கொடுத்துவிடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM