அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தென்னாபிரிக்காவின் பிள்ளென்டர் மற்றும் அபோர்ட் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் அணித்தலைவர் ஸ்மித் மாத்திரம் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

தென்னாபிரிக்கா அணி நார்பில்  பிள்ளென்டர் 5 விக்கட்டுகளையும் , அபோர்ட் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்துள்ள தென்னாபிரிக்க அணி இதுவரையில்  142 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது.