சர்வதேச ஒத்துழைப்பைப் பெற வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் - நாலக கொடஹேவா

Published By: Digital Desk 5

23 Aug, 2022 | 03:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். 

அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுத்து, இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்காமல் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பெரும்பாலும் ஒருமித்த நிலையில் காணப்படுகிறது.

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை வரையறுத்து,இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்காமல் குறுகிய கால அடிப்படையில் சிறந்த கொள்கை அடிப்படையில் சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.

பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கு அதிக பெரும்பான்மை பலம் உள்ளது ஆகையால் தமக்கு அதிக அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளமை முறையற்றது.பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது.

பொதுஜன பெரமன முரன்பாடாக விடயங்களை முன்வைத்துள்ளதால் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது இழுபறி நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை விரைவாக ஸ்தாபிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:43:12
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24