கற்பனையை விட்டுவிடுங்கள்!

Published By: Devika

23 Aug, 2022 | 02:34 PM
image

கேள்வி 
எனக்கும் என் கணவருக்கும் 20 வயதுதான். திருமணமாகி ஒரு வருடமாகிறது. அவர் தொழில் நிமித்தம் வெளியூரில் தங்கி வேலை செய்தார். இன்னும் சில நாட்களில் நிரந்தரமாக என்னுடனேயே வந்துவிடுவார். இனிமையான வாழ்க்கை எம்முடையது. ஆனால், என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். மிகுந்த குழப்பத்துடன் இதைப் பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அந்தப் பெண்ணுடன் கதைத்தது உண்மைதான். ஆனால், வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இனி அந்தப் பெண்ணிடம் கதைக்கவும் மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். என் கணவர் என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். ஆனால், தனிமையில் இருக்கும் எனக்கு, எந்நேரமும் அதே யோசனையாகவே இருக்கிறது. மேலும், அவரும் நானும் இனிச் சேர்ந்து வாழவிருக்கும் நிலையில், உறவின்போதும் அந்தப் பெண் பற்றிய நினைவே எழுமோ என்று பயமாகவும் இருக்கிறது.

பதில்
உண்மைதான். எத்தகைய அன்னி­யோன்னியத்திலும், சந்தேகம் என்ற ஒரு சிறு கோடும் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடக்கூடியதுதான். உங்கள் சந்தேகத்தை காலத்தால் மட்டுமே அழிக்க முடியும்.

அந்தப் பெண் பற்றிக் கேட்டபோது, உங்கள் கணவர், அந்தப் பெண்ணுடன் கதைத்தது உண்மைதான் என்றும், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் இனி அவருடன் கதைக்க மாட்டேன் என்றும் கூறியதிலிருந்து, அவர் நிச்சயமாக உங்களுக்கு உண்மையானவராகவே இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆண்கள், தொழில் ரீதியாகத் தம் மனைவியரை விட்டுப் பிரிந்திருந்தால், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பர் என்று இன்னும் பல பெண்கள் நம்புகின்றனர். ஆனால், அது தவறு. எல்லா ஆண்களும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். உங்களது கணவர் இனி நிரந்தரமாகவே உங்களுடன் இணைந்து வாழப்போகிறார். இது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்பதை நீங்களே அறிவீர்கள். எனவே, இந்த நேரத்தில், பழைய விடயங்களை மனதில் போட்டுக் குழப்புவதில் நேரத்தைச் செலவிடாமல் உங்களது இணைந்த வாழ்க்கையை எவ்வாறு வாழலாம் என்று எண்ணுவதில் செலவிடுங்கள். அதையும் மீறி சங்கம நேரத்தில் அந்த நினைவு வந்தால், உடனே கற்பனையை விட்டு யதார்த்தத்துக்கு வாருங்கள். குறுகிய காலத்தில் உங்களது பிரச்சினை அடங்கிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்