சமையல் அறைக்குள் காதல்!

Published By: Devika

23 Aug, 2022 | 10:36 AM
image

னைவி சமைக்கும் உணவின் ருசியை குறை­கூறும் கணவன்மார்கள், அதை சரிப்படுத்துவதற்கு முயல்வதில்லை. 

உணவு விஷயத்தில் ‘டைனிங் டேபிளோடு’ நின்று விடாமல், அடிக்கடி சமையல் அறைக்குள்ளும் ‘சர்ப்ரைஸ் விசிட்’ கொடுங்கள். குக்கர் விசில் சத்தம், மிக்ஸி-க்ரைண்டர் என இரைச்சல் சத்தத்துடன் சமையல் அறையில் அவதிப்­படும் மனைவிக்கு, அன்பு கணவரின் வருகை சற்று ஆறுதலை கொடுக்கலாம். 

வேலைக்கு செல்லும் நாட்களில் நேரம் ஒதுக்க முடியா­விட்டாலும் விடுமுறை நாட்களிலாவது காய்கறி நறுக்குவது, சப்பாத்தி மாவு தேய்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். அதனை அரைகுறையாக செய்தாலும் அதுவும் அன்பு தொல்லையாக மாறி ரொமாண்டிக் பட்டியலில் சேரும். 

வெளிநாடுகளில் இரவு உணவின்போது பயன்படுத்திய பாத்திரங்களை, மனைவி கழுவி கொடுக்க, கணவன் உணவின் சுவையை புகழ்ந்தபடி துணியை கொண்டு துடைத்து வைப்பார். இதை நம் வாழ்விலும், செய்து பார்க்கலாம். 

நாள்தோறும் செய்யமுடியாத பட்சத்தில், வார விடு­முறையில் மனைவியோடு, சமையல் அறையில் கதை பேசியபடி வீட்டுவேலைகளை செய்து முடிக்கலாம். 

விடுமுறை நாட்களில், வீட்டில் ஓய்வெடுக்கும்போது வீட்டை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு மனைவி­யின் வேலைப்பளுவை குறைக்கலாம். குறிப்பாக சோபா செட்டுகளை சுத்தப்படுத்துவது, வீட்டில் படிந்திருக்கும் தூசிகளை அகற்றுவது, பூஜை பொருட்களை சுத்தப்­படுத்தி கொடுப்பது... என இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி­யூட்டும் வேலைகளை செய்து கொடுத்து, காதலை அதிகப்­படுத்தலாம். 

இதுபோன்ற பணிகள், அவர்களுக்கு பூங்கொத்தை பரிசளித்தது போன்ற உணர்வை கொடுக்கும். சில பெண்க­ளுக்கு கோப்பி குடிக்க பிடிக்கும். சிலருக்கு சமோசா, பஜ்ஜி, பகோடா போன்ற நொறுக்குத் தீனிகளை ருசிப்பது பிடிக்கும். சிலருக்கு பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை சுவைக்க பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விருப்ப உணவு இருக்கும். மனைவியின் விருப்ப உணவை தெரிந்து கொள்வதோடு, அதை சமைக்கவும் பழகலாம். 

கணவன்மார்களின் அரைகுறை சமையல்கூட, மனைவி­களுக்கு முழு மனநிறைவை கொடுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right