(என்.வீ.ஏ.)
இங்கிலாந்துக்கு எதிராக செல்ஸ்போர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இளையோர் (19 வயதின்கீழ்) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை (22) அசித்த வன்னிநாயக்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை கௌரவமான நிலையை அடைந்துள்ளது.
19 வயதின் கிழ் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் பெற்ற 387 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் 19 வயதின்கிழ் இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கண்டி புனித அந்தோனியார் கல்லூரி வீரரான அசித்த வன்னிநாயக்க 6 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 307 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டறிகள் அடங்கலாக 132 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, இரண்டாவது விக்கெட்டாக ஷெவன் டெனியல் (25) ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 50 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் அறிமுக இளையோர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அசித்த வன்னிநாயக்க 3ஆவது விக்கெட்டில் பவன் பத்திராஜவுடன் 83 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் ரனுத சோமரட்னவுடன் 137 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
திரித்தவ வீரர்களான பவன் பத்திராஜ, ரனுத சோமரட்ன ஆகிய இருவரும் முறையே 32 ஓட்டங்களையும் 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின்னர் அசித்த வன்னிநாயக்கவுடன் இணைந்த அணித் தலைவர் ரவீன் டி சில்வா பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ரவீன் டி சில்வா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் பெஞ்சமின் க்ளிவ் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM