அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுத்திகரிப்புப் பணியாளர்கள் சம்பள உயர்வைக் கோரி பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகையில் வீதிகளில் குப்பைகள் குவிவது வழமையாகும்.
ஆனால் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது அபிவிருத்தியடைந்த நாடுகள் வரிசையிலுள்ள பிரித்தானியாவிலும் அதையொத்த பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது
பிரித்தானியாவின் ஒரு பாகமாகமுள்ள ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் பிராந்தியத்தில் சம்பள உயர்வைக் கோரி சுத்திகரிப்புப் பணியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பிராந்தியத்தில் வீதி வீதியாக குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு குப்பைகளை மீள் சுழற்சிக்குட்படுத்தும் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
பிராந்திய அரசாங்க அமைப்பான கொஸ்லா மேற்படி பணியாளர்களுக்கு வழங்க முன்வந்திருந்த 3.5 சதவீத சம்பளத்தை பணியாளர்கள் நிராகரித்தே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேலும் 9 நாட்களுக்கு பணி நிறுத்தப் போராட்டத்தை நீடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எடின்பேர்க்கில் கடந்த 5 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் நகைச்சுவைத் திருவிழா இடம்பெற்று வருவதால் அந்தப் பிராந்தியத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் சுத்திகரிப்புப் பணியாளர்களின் பணிநிறுத்தப் போராட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பிராந்தியத்தில் வீதிகளிலுள்ள குப்பைக் கொள்கலங்கள் உணவுப் பொதிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்;றும் ஏனைய பொருட்களால் நிரம்பி வழிந்து மலை போன்று குப்பைகள் குவிந்துள்ளதால் எலிகள் பெருக்கெடுத்து அதனால் தொற்று நோய்கள் பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்படி குப்பைகள் காரணமாக பிரதேசவாசிகளும் வர்ததக நிறுவனங்களும் கடுமையான இடையூற்றை எதிர்கொண்டுள்ளதாக எடின்பேர்க் பிராந்திய சபைத் தலைவர் கம்மி டே கூறினார்.
ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகொலா ஸ்டேர்ஜியன் பிராந்திய அரசாங்கத்தின் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க பிராந்திய சபை பணியாளர்களின் ஊதியத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்க அந்த சபையின் தலைவர்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM