காஸ்மீரில் சமூக ஊடகங்கள் மூலம் வழிநடத்தப்படும் தீவிரவாதம் முடிவிற்கு வந்துள்ளது- புதிய கலப்பு தீவிரவாதம் உருவாகியுள்ளது

Published By: Rajeeban

22 Aug, 2022 | 04:38 PM
image

காஸ்மீரில் சமூக ஊடகங்கள் மூலம் வழிநடத்தப்படும் பயங்கரவாதம் முடிவிற்கு வந்துள்ளதுடன் அதற்கு பதில் மேலும் அதிகளவு இரகசியமான கலப்பு  கட்டம் உருவாகியுள்ளது.

  கொல்லப்பட்ட ஹிஜ்புல் முஜாஹீடிதீனின் தளபதி  புர்ஹான் வனி 2014 முதல் 2019 வரை சமூக ஊடகங்களை மிகவும் திறமையாக பயன்படுத்தினார்.

அக்காலப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவது அவர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்துகொண்டுள்ளனர் என்பதை தெரிவிக்கும் செய்தியாக காணப்பட்டது.

அவ்வாறான போராளிகள் கிரிக்கெட் விளையாடும் அல்லது ஆயுதப்பயிற்சி எடுக்கும்  படங்கள் வீடியோக்களை வெளியிடுவார்கள்,அவை வைரலாகும் காஸ்மீர் பள்ளத்தாக்கில் பிரபலமாகும்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக போராளிகளின் செயற்பாடுகள் இரகசியமானவையாக காணப்படுகின்றன.

கடந்த வருடம் ஜம்முகாஸ்மீர் பொலிஸார் கலப்பு போராளிகள் என்ற சொற்பதத்தை உருவாக்கினார்கள் இதன் அர்த்தம் முகமற்ற அல்டிராஸ்கள் என்பதாகும்.

இவ்வாறான முகமற்ற  போராளிகள்  பொதுமக்களை பொலிஸாரை கொலை செய்த பின்னர் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை காண்பிப்பதற்காக அவர்கள் தலைமறைவாகுவார்கள் என ஜம்முகாஸ்மீரின் பொலிஸ் தலைவர் தில்பாக் சிங் தெரிவி;த்துள்ளார்.

இந்த வருடம் கொல்லப்பட்ட அனேகமான பொலிஸாரும் பொதுமக்களும் இந்த வகை தீவிரவாதத்தின் உத்திக்கு பலியானவர்கள்.

கலப்பு தீவிரவாதம் என்பது பாக்கிஸ்தானின் நன்கு திட்டமிடப்பட்ட  செயற்பாடு அவர்கள் கொலைகள் இடம்பெறவேண்டும்,குற்றவாளிகள் தப்பவேண்டும் என விரும்புகின்றனர் என சிங் கடந்த மாதம் தெரிவித்தார்.

பொலிஸார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்ற இலகுவான இலக்குகளை இலக்குவைப்பதற்காக பதின்ம வயது இளைஞர்களை எல்லைக்கு வெளியே உள்ள பயங்கரவாதத்திற்கு ஆள்சேர்ப்பவர்கள் சேர்க்கின்றனர்.

முன்னைய போராளிகளை போல இந்த இளைஞர்கள் இதுவரை சட்டத்தின் பார்வையில் சிக்காதவர்கள்.

இ;ந்த புதிய வகை கலப்பு போராளிகள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் முன்னைய போராளிகள் ஏகே 47 போன்ற  ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் இவர்கள் கைத்துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்துகின்றார்கள் எனதெரிவிக்கும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் படுகொலைகளில் ஈடுபட்ட பின்னர் இவ்வாறானவர்கள கைதுசெய்யப்பட்டாலும் அவர்கள் சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர் என தெரிவிக்கின்றார்.

சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் படுகொலைகளிற்கான ஆகக்கூடிய தண்டனை புனர்வாழ்வு- குற்றம்சாட்டப்பட்டவர் மூன்று வருடம் கண்காணிப்பு விடுதியில் வைக்கப்படுவார்.

கடந்த பெப்ரவரியில் ஸ்ரீநகரில் கிருஸ்ணா தபா என்ற பிரபல உணவகத்தின் உரிமையாளர் மகன் ஆகாஸ் மேஹ்ரா கொல்லப்பட்ட சம்பவத்தை உதாரணத்திற்கு காண்பிக்கும் அதிகாரியொருவர் கொலைக்குற்றவாளிகளில் இருவர் சிறார்கள் அவர்கள் கைதுசெய்யப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள கண்காணிப்பு இல்லத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் மூன்று வருட காலம் முடிவடைந்ததும் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என தெரிவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55
news-image

கர்நாடகா | லாரி பள்ளத்தில் கவிழ்ந்த...

2025-01-22 13:49:37
news-image

புட்டினை சந்திப்பது முதல் காசா யுத்த...

2025-01-22 12:25:36
news-image

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத...

2025-01-22 11:00:00
news-image

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர்...

2025-01-22 10:39:28
news-image

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு...

2025-01-22 07:25:56
news-image

துருக்கி ஹோட்டலில் பாரிய தீவிபத்து- ஜன்னல்கள்...

2025-01-22 06:58:13
news-image

அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும்...

2025-01-21 16:08:47
news-image

துருக்கியில் ஹோட்டலில் தீ : 66...

2025-01-22 02:51:26
news-image

பணயக்கைதிகளிற்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

2025-01-21 11:37:02
news-image

காசாவில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

2025-01-21 11:04:38
news-image

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:...

2025-01-21 10:05:55