Huggies நட்சத்திர குழந்தை - குடும்ப பிணைப்பை வலியுறுத்தும் பிரச்சார ஊக்குவிப்பு ஆரம்பம்

Published By: Priyatharshan

11 Nov, 2016 | 05:32 PM
image

எமது பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வழியமைப்பதானது சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடுவதுடன் அந்த இலட்சியத்தை சிறப்பாகப் பேணுவதில் Huggies நட்சத்திர குழந்தை - குடும்ப பிணைப்பை வலியுறுத்தும் பிரச்சார ஊக்குவிப்பு ஆரம்பத்திற்கு நிகராக வேறு எதுவும் கிடையாது.

அபிலாஷைகள் நிறைந்த எதிர்காலத்தைத் தோற்றுவித்து அதனை நோக்கி வெற்றிகரமாகப் பயணிப்பதற்கு தேவையான வரப்பிரசாதத்தைத் தோற்றுவிப்பதில் எதிர்கால இளம் தலைமுறைக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான உலகிற்கு வழியமைக்கும் வளர்ச்சி வாய்ப்புக்களை Huggies நட்சத்திர குழந்தை - குடும்ப பிணைப்பை வலியுறுத்தும் பிரச்சார ஊக்குவிப்பு ஆரம்பம் எப்போதும் முன்னெடுத்து வந்துள்ளது.

குழந்தைகளுக்கான அரையாடை (diaper) சந்தையில் தனது அதிசிறந்த தரத்திற்காக சர்வதேசரீதியாக பிரபலமான ஒரு வர்த்தகநாமமாக Huggies திகழ்ந்து வருகின்றது. அண்மையில் Huggies வர்த்தகநாமம் இலங்கையிலும் அறிமுகமாகியுள்ளதுடன் இலங்கையில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு மேற்குறிப்பிட்ட இலட்சியப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

பம்பரம் போல் சுழலும் இன்றைய உலகில் எம்மைச் சூழ தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற மாற்றங்களும், அவை தொடர்பான விளைவுகளும் சாதாரணமான ஒரு விடயமாக மாறியுள்ளன. இவை வளர்ந்தவர்களுக்கு மட்டும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை மாறாக குடும்பங்கள் மற்றும் அவர்களது கைக்குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளையும் பாதிக்கின்றன.

வேலைப்பளுமிக்க வாழ்க்கைமுறையானது ஒன்றாகக் கூடியிருந்து ஓய்வெடுக்கும் குடும்ப கட்டமைப்பை மாற்றியமைத்து தமது குடும்பத்தைக் கவனிப்பதில் பெற்றோர்கள் இன்று அதன் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. குடும்பத்தின் அரவணைப்பு மற்றும் அக்கறை ஆகிய பாதுகாப்பான பிணைப்பிலிருந்து இன்று தமது இளம் பிள்ளைகள் விலகிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைமையை அனுபவிக்கும் நிலைக்கு பெற்றோர்கள் மெதுவாக தள்ளப்பட்டு வருகின்றனர்.

பெற்றோர் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கிடையிலான பிணைப்பைப் பேணுதல் மற்றும் இன்றைய உலகின் யதார்த்தங்களை இனங்காணுதல் ஆகியவற்றை தெளிவாக புரிந்துகொண்டுள்ள Huggies இன்றைய சமூக முறைமையின் யதார்த்தங்களை எவ்வாறு குடும்பங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணரச் செய்யும் பணியை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

நேசத்தை வளர்க்கும் அதேசமயம் பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளும் தமக்கிடையில் விடுபட்டுப் போயுள்ள பிணைப்பை இனங்கண்டு அவர்கள் குடும்பப் பிணைப்பை மீளவும் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை Huggies வடிவமைத்துள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் முதற்கட்டம் ஒக்டோபர் 1 ஆம் திகதி சிறுவர்கள் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய தமது பிள்ளைகளின் புகைப்படங்களை Huggies முகநூல் பக்கத்தினூடாக சமர்ப்பிக்குமாறு பெற்றோருக்கு அழைப்புவிடும் வகையில் நாடளாவிய பிரச்சார நடவடிக்கையை Huggies ஆரம்பித்துள்ளது.

தொலைக்காட்சி அல்லது பத்திரிகை விளம்பரங்கள் எதுவுமின்றி Huggies போன்ற குழந்தைகளை இலக்காகக் கொண்டு வர்த்தகநாமம் ஒன்று சமூக ஊடகத்தின் மூலமாக இதனை அமுல்படுத்துவது ஆசிய பிராந்தியத்தில் இது வரை இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களை அனுப்பி வைப்பதற்கு ஒக்டோபர் 19 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன் பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்துடன் முன்வந்து 1,500 இற்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளமை இப்பிரச்சாரத்தின் வெற்றியை நிரூபித்துள்ளது.

அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்களிலிருந்து அடுத்த கட்டப் போட்டிக்காக 250 சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அடுத்த கட்டத்தில் திரைச் சோதனைக்காக தெரிவுசெய்யப்பட்ட 250 சிறுவர்களும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காக வரவழைக்கப்பட்டதுடன் பிரபல நடிகையான சங்கீதா வீரரட்ண அவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.

ஒக்டோபர் 29 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வு சர்வதே தரத்திற்கு இணையான ஒரு நிகழ்வாக இடம்பெற்றதுடன் ஹோட்டலில் நிகழ்வு இடம்பெற்ற வேளையில் 6 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய பிள்ளைகளின் அனைத்துத் தேவைகளையும் கவனிப்பையும் Huggies வழங்கியிருந்தது.

இப்போட்டியின் நிறைவில் மூன்று பிள்ளைகள் தெரிவுசெய்யப்படுவதுடன் அவர்கள் Huggies முன்னெடுக்கும் குடும்ப பிணைப்பிற்கான ‘சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில்’ அங்கம் வகிக்கும் வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்வர். மேலும் அவர்கள் Huggies இன் வர்த்தகநாமத் தூதுவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வதுடன் பெறுமதிமிக்க பணப்பரிசுகளையும் பெற்றுக்கொள்வர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31