சீனாவின் தாக்குதல் குறித்து அதிகளவு அவுஸ்திரேலியர்கள் அச்சம் - கருத்துக்கணிப்பு தகவல்

Published By: Rajeeban

22 Aug, 2022 | 03:11 PM
image

தாய்வான் மக்களை விட அவுஸ்திரேலிய மக்கள் சீனாவின் தாக்குதல் குறித்து அச்சமடைந்துள்ளனர்.

புதிய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பத்தில் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை தனது நாட்டை சீனா தாக்கும் என அச்சம்கொண்டுள்ளதை  புதிய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது இது தாய்வானியர்கள் மத்தியில் காணப்படும் அச்சத்தை விட அதிகமாகும்.

எதிர்காலத்தில் சீனா தாய்வான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் என நாலில் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை கருதுவதையும் இன்ஸ்டியுட்டின் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகார திட்டத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தாய்வானில் இருபதில் ஒருவரே அவ்வாறு கருதும் நிலை காணப்படுகின்றது.

சீனாவுடன் அமைதியான உறவுகளை பேணமுடியாவிட்டால்  தாய்வான் சுதந்திர நாடாக மாறவேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 70 வீதமான அவுஸ்திரேலியர்களும்  தாய்வான் மக்களும் கருத்துவெளியிட்டுள்ளனர்.

சீனா குறித்தும் யுத்தத்திற்கான வாய்ப்பு குறித்தும் அச்சநிலை அதிகரிப்பதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவும் தாய்வானும் சீனாவிற்கு எதிரான யுத்தத்தில்தோல்வியடையும் என இரு நாடுகளையும் சேர்ந்த 60 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் நாட்டை சீனாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என பெண்களை விட ஆண்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

85 வீதமான அவுஸ்திரேலியர்களும் 80 வீதமான தாய்வான் மக்களும் சீனாவை ஆக்கிரமிப்பு குணம் நிரம்பிய நாடு என கருதுகின்றனர்.

ஆனால் இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் அமெரிக்காவே ஆக்கிரமிப்பு நாடு என கருதுவதும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சமாதானத்தை பேணுவதற்காக சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவது அனைவரினதும் நலனிற்கும் உகந்த விடயம் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10