செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து சூரிய வலுப் பிறப்பாக்களுக்கு இலகு தவணை

By Vishnu

22 Aug, 2022 | 08:53 PM
image

வாடிக்கையாளர்கள் சௌகரியமான தீர்வுகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் ஹேலீஸ் சோலருடன் செலான் வங்கி பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, சூரிய மின்பிறக்கல் கட்டமைப்புகளை கொள்வனவு செய்வதற்காகா இலகு தவணை முறை மீளுச் செலுத்தும் வசதியை செலான் அட்டைதாரர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. 

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாகவும், அதிகரித்துச் செல்லும் மின்சார கட்டணங்களின் காரணமாகவும், சூரிய மின்சக்தி சிறந்த பொருத்தமான மாற்றுத் தீர்வாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், சூரியபடல்களைப் பொருத்துவதற்கான உயர்ந்த கட்டணங்கள் காரணமாக மக்கள் இந்த மாற்றுத் தீர்வை பயன்படுத்த முன்வருவதில்லை. ஹேலீஸ் சோலருடன் செலான் வங்கியின் பங்காண்மையினூடாக, பொது மக்களுக்கு சூரிய மின்வலுவுக்கு மாறிக் கொள்வது சகாயமான தெரிவாக்கப்பட்டுள்ளது.

செலான் அட்டைகளுக்கான இலகு தவணை முறை கொடுப்பனவில் 0% வட்டியில்லாத மீளச் செலுத்தல்கள் 3 மாதங்கள், 6, 12 மற்றும் 24 மாதங்கள் வரை ஆகக் குறைந்தது 10,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை வழங்கப்படுகின்றது. கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டு 7 நாட்களுக்குள் வங்கியின் ஹொட்லைன் இலக்கமான 0112008888 உடன் தொடர்பு கொண்டு இலகு தவணை முறை மீளச் செலுத்தும் வசதிக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் செலான் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி ருச்சித் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “அத்தியாவசிய தேவைகளுக்கான, அத்தியாவசிய அட்டையான செலான் கார்ட்ஸ், எமது வாடிக்கையாளர்களின் அத்தியாவசிய நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் எப்போதும் கவனம் செலுத்துகின்றது.

அவர்களுக்கு எவ்வாறு சௌகரியமான தீர்வுகளை வழங்க முடியும் என்பது தொடர்பான வழிமுறைகளை தொடர்ச்சியாக இனங்காண முயற்சி செய்கின்றோம். விசேடமாக இந்த நெருக்கயான காலப்பகுதியில், செலான் கார்ட்ஸ் ஊடாக, பரந்தளவு தீர்வுகள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையை தணிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

மேலும், நிலைபேறாண்மை அடிப்படையில், இந்த நடவடிக்கையினூடாக பெருமளவான மக்களுக்கு புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாறிக் கொள்ளக்கூடியதாக இருக்கும், இதனூடாக காபன் வெளியீட்டைக் குறைக்க முடியும் என்பதுடன், மசகு எண்ணெய் இறக்குமதிக்கான செலவைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், இந்த நிலைபேறான வலு மூலங்களை பல இலங்கையர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியமைப்பது எமது கடமையாகும். அதனூடாக நீண்ட கால அடிப்படையில் வலுப் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

செலான் வங்கி மற்றும் ஃபென்டன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான ஹேலீஸ் சோலர் ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மை என்பதனூடாக, இந்த இணைந்த செயற்பாட்டின் உறுதித்தன்மைக்கு வலுச் சேர்த்துள்ளன. 

புதுப்பிக்கத்தக்கவை மற்றும் வலு சேகரிப்பு கட்டமைப்புகள் போன்றவற்றில் ஹேலீஸ் சோலர் பிரதானமாக கவனம் செலுத்துகின்றது. ஒரு தசாப்த காலத்துக்கும் அதிகமான சந்தைச் சிறப்புடன் நிறுவனம் வெற்றிகரமாக 75MW சூரிய மின்பிறப்பாக்கல் கட்டமைப்புகளை நாடு முழுவதிலும் பொருத்தியுள்ளது. 

இதனூடாக இலங்கையில் பொறியியல், கொள்முதல் மற்றும் நிர்மாணம் (EPC) ஆகியவற்றில் ஒப்பற்ற முன்னோடியாக திகழ்கின்றது. ஹேலீஸ் சோலரினால் வழங்கப்படும் தீர்வான Energynet இனால் பரந்தளவு off-grid, hybrid மற்றும் battery backup கட்டமைப்புகள் வழங்கப்படுகின்றன.

ஃபென்டன்ஸ் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக கருத்துத் தெரிவிக்கையில், “நெருக்கடியான சூழ்நிலை தொடர்ந்தும் காணப்படுவதால், நடைமுறைச் சாத்தியமான, மாற்று புதுப்பிக்கத்தக்க வலு தீர்வுகளை நிறைவேற்றுவதற்காக கைகோர்க்கும் வழிமுறைகளை இனங்காண வேண்டியுள்ளது. 

வினைத்திறனான வலுத் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், நுகர்வோருக்கு தமது வாழ்க்கையில் நிலைபேறாண்மையை பேணுவதற்காகவும், செயற்பாடுகள் மற்றும் உற்பத்தித் திறனை பேணுவதற்காகவும் Energynet ஐ நாம் அறிமுகம் செய்துள்ளோம். 

மின் தடைப்படும் காலப்பகுதியில் இந்தத் தீர்வினூடாக பயன்பெற முடியும் என்பதுடன், பற்றரியில் வலு சேமிக்கப்படுவதால் இரவு வேளையில் மின் தடைப்படுவதற்கும் சிறந்த தீர்வாக அமைந்திருக்கும். முன்னணி வங்கி மற்றும் நிதியியல் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து இலகு தவணை முறை மீளச் செலுத்தும் வசதி மற்றும் கடனட்டை கொடுப்பனவு வசதி போன்றவற்றை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

ஹேலீஸ் சோலர் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “தேசத்தின் அதிகரித்துச் செல்லும் வலுத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை கட்டியெழுப்புவதற்கு நாம் முயற்சி செய்கின்றோம். தற்போதைய மின் தடை மற்றும் எரிபொருள் இன்மை போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக Energynet அமைந்துள்ளது.

நுகர்வோருக்கு தமது தினசரி வாழ்க்கையில் அவசியமான சாதனங்களை சௌகரியமான முறையில் வலுவூட்டுவதற்கு உதவியாக அமைந்துள்ளது. மின் நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் இந்த தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எதிர்காலத்தில் மேலும் புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.

செலான் வங்கி பற்றி

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான கணக்குகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, நாடு முழுவதிலும் 540 க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் அலகுகளைக் கொண்டுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A(LKA)’ ஆக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். 

ஹேலீஸ் சோலர் பற்றி

ஃபென்டன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான ஹேலீஸ் சோலர், வீடுகள், வணிகப் பகுதிகள் மற்றும் தொழிற்துறை சந்தைப் பிரிவுகளுக்கும், நுகர்வு மட்டத்திலான திட்டங்களில் கவனம் செலுத்தும் சோலர் பிவி பொருத்துகை நிறுவனமாக திகழ்கின்றது. ஹேலீஸ் சோலர் நாடு முழுவதிலும் 75MW க்கு அதிகமான சூரிய ஒளி மின்பிறப்பாக்கல் கட்டமைப்புகளை வெற்றிகரமாக பொருத்தியுள்ளது. இதனூடாக இலங்கையில் ஒப்பற்ற முன்னோடியான பொறியியல், கொள்முதல் மற்றும் நிர்மாண (EPC) நிறுவனமாக திகழ்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18