இம்ரான்கானிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் - எவ்வேளையிலும் கைதுசெய்யப்படலாம்

By Rajeeban

22 Aug, 2022 | 12:36 PM
image

பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஆற்றிய மிகவும் உணர்ச்சிவசமான  உரையின் போது இம்ரான் கான்  பொலிஸார் மற்றும் நீதவானிற்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்தார் என்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து பொலிஸார் அவருக்கு எதிராக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இம்ரான்கான் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை அவர் இதுவரை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.அவரது ஆதரவாளர்கள் பொலிஸார் அவரை கைதுசெய்வதை தடுப்பதற்காக பெருமளவில் அவரது இல்லத்தின் அருகில் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்பிரலில் அதிகாரத்தை இழந்த இம்ரான்கான் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆதரவுடனான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருகின்றார், அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முயல்வதால் அரசியல்  பதற்றம் அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை இஸ்லாமபாத்தில் ஆற்றிய உரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் நீதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்ததுடன் தனது நெருங்கிய சகாவொருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டியிருந்தார்.

இம்ரான்கானின் இந்த உரையை நீதவான் அலி ஜாவிட் என்பவர் பேரணியில் நின்றபடி செவிமடுத்தார் என பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் இதற்கு தயாராகுங்கள் நாங்களும் நடவடிக்கை எடுப்போம் நீங்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும் என இம்ரான்கான் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

பொலிஸார் நீதவானை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்;டு காரணமாக இம்ரான்கான் நீண்டகால சிறையில் அடைபடும் ஆபத்தை எதிர்கொள்கின்றார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17