சீயான் விக்ரமின் 'கோப்ரா' பட முன்னோட்ட வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

22 Aug, 2022 | 11:53 AM
image

சீயான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா' படத்தின் முன்னோட்டம், வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோப்ரா'. கணித புதிரை மையப்படுத்திய புலனாய்வு திரில்லர் திரைப்படமான இதில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் இர்ஃபான் பதான் எதிர்மறை நாயகனாக அறிமுகமாகிறார். ஆனந்தராஜ், ரோஷன் மாத்யூ, மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி , பத்மபிரியா, கனிகா, மீனாட்சி கோவிந்தராஜன், கே எஸ் ரவிக்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 31ம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் ஓகஸ்ட் 25ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இன்னும் ஓரிரண்டு திரைப்படங்களில் நடித்த பிறகு, திரை உலகிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கும் சீயான் விக்ரம், கதையின் நாயகனாக ஏழு வித கெட்டப்புகளில் நடித்திருக்கும் 'கோப்ரா' படத்திற்கு அவருடைய ரசிகர்களைக் கடந்து, திரை உலகினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00